For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தாலியில் இடிந்து விழுந்த மோரான்டி பாலம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

இத்தாலி நாட்டில் உள்ள ஜெனோவா நகரத்தின் மோரான்டி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானார்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

By Rajeswari
Google Oneindia Tamil News

ரோம்: இத்தாலி நாட்டில் உள்ள ஜெனோவா நகரத்தின் மோரான்டி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானார்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலி நாட்டில் மலைகள் சுழுந்த பகுதியில் அமைந்துள்ள நகரம் தான் ஜெனோவா. இந்த பகுதியில் கான்கிரீட் தூண்கள், மூலம் மலைகளுக்கு நடுவில் பாலம் அமைத்து அதில்தான் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். அந்த சாலையின் இடையே இதேபோல் பல பாலங்களும், வாய்க்கால்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The Morandi bridge collapsed: 43 people lost their lives

இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு மும்பு ஜெனோவா நகரின் மேற்கில் அமைந்திருக்கும் ஏ10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்ற பாலத்தின் ஒருபகுதி கடந்த 13-ம் தேதி திடீரென்று இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த பாலம், சுமார் 200 மீட்டர் நீளம் கொண்டது. இது சுமார் 100 அடி ஆழத்தில் நொறுங்கி விழுந்தது. அந்த சம்பவம் நடந்த போது அந்த வழியாக பயணம் செய்த பல கார்களும் லாரிகளும் பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டன. அவ்வாறு சிக்கி கொண்ட வாகனங்களை மீட்கும் வேலையில் அந்நாட்டு வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

The Morandi bridge collapsed: 43 people lost their lives

பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் கூறியது. பின்னர், வாகன இடிபாடுகளுக்கு நடுவில் இருந்து அடுத்தடுத்து இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த விபத்தின் மீட்பு பணிகள் நேற்று இரவுடன் முடிந்துவிட்டன. மீட்பு பணி முடிவுபெறும் தருவாயில் கார்களுக்கு இடையில் சிக்கி இருந்த 3 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதனையடுத்து , இந்த கொடூர விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The death toll in the collapse of the Morandi Bridge in Genoa City in Italy has risen to 43.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X