For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்தில் “1 பவுண்ட்” நாணயத்தை உருவாக்கி பட்டையைக் கிளப்பிய பள்ளி மாணவன்

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் புதிய 1 பவுண்ட் நாணயத்தை உருவாக்கும் போட்டியில் பள்ளி மாணவன் ஒருவன் வெற்றி பெற்று அசத்தியுள்ளான்.

இங்கிலாந்தில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 1 பவுண்ட் நாணயம் பாதுகாப்பானது இல்லை என்பதால், புதிய நாணயம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

1 pound

அதன்படி இங்கிலாந்தின் பாரம்பரியத்தையும் பெருமையும் வெளிப்படுத்துவதும் விதமாக புதிய நாணயத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மொத்தமாக 6000 பேர் இந்த போட்டியில் தங்கள் புதிய நாணய வடிவமைப்பை சமர்பித்தனர். இதில் டேவிட் பியரஸ் என்ற 15 வயது பள்ளி மாணவன் வடிவமைத்த 1 பவுண்ட் நாணயம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அந்த மாணவன் கூறும்போது ''இதை உருவாக்குவதற்கான நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டியிருந்தது. முழு இங்கிலாந்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக புதிய நாணயம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்" என்று தெரிவித்தான்.

English summary
This is the 12-sided £1 coin that will replace the version that's been in circulation for more than 30 years in 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X