For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

500 ஏக்கரில் அலுவலகம் கட்டும் மைக்ரோசாப்ட்... கிரிக்கெட் மைதானத்திற்குத்தான் முக்கியத்துவம்!

அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 500 ஏக்கரில் பிரம்மாண்ட புதிய அலுவலகம் கட்டும் பணியில் இறங்கி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    500 ஏக்கரில் அலுவலகம் கட்டும் மைக்ரோசாப்ட்...வீடியோ

    வாஷிங்டன்: அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 500 ஏக்கரில் பிரம்மாண்ட புதிய அலுவலகம் கட்டும் பணியில் இறங்கி இருக்கிறது. இதற்காக வாஷிங்டனில் இப்போதே வேலைகளை தொடங்கிவிட்டது.

    இந்த கட்டிடம் முழுக்க முழுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா விருப்பத்தின்படி வடிவமைக்கப்பட இருக்கிறது. மேலும் அவருக்கு பிடித்த சில முக்கியமான விஷயங்கள் அங்கு இடம்பெற உள்ளது.

    இந்த கட்டிடம் குறித்து ஆச்சர்யம் அளிக்க கூடிய தகவல்கள் நிறைய வெளியாகி உள்ளது. முக்கியமாக இதில் கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

    புதிய கட்டிடம்

    புதிய கட்டிடம்

    வாஷிங்டனில் இருக்கும் 'ரெட்மோண்ட்' என்ற பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய அலுவலகத்தை கட்ட இருக்கிறது. இந்த அலுவலகம் மொத்தம் 500 ஏக்கரில் இருக்கும். இதில் மொத்தம் 18 கட்டிடங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 2018 இறுதிக்குள் இதன் கட்டுமான பணி முடிவடையும். இந்த கட்டிடம் எப்படி இருக்கும் என்று இந்த நிறுவனம் யூ டியூபில் வீடியோ வெளியிட்டு இருக்கிறது.

    என்ன இருக்கும்

    இந்த கட்டிடம் 500 ஏக்கரில் கட்டப்படுவதால் இதில் நிறைய வசதிகள் செய்யப்பட இருக்கிறது. மிகப்பெரிய அளவில் 2000 க்கும் அதிகமான நபர்கள் உட்கார்ந்தது பார்க்கும் வகையில் திறந்த வெளி தியேட்டர் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் சாப்பிடுவதற்கு மட்டுமே 8 அடுக்கு மாடிக்கட்டிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. மேலும் கார் பார்க்கிங், விளையாட்டு தளம் என நிறைய புதிய வசதிகளும் இடம்பெறவுள்ளது.

    கிரிக்கெட்

    கிரிக்கெட்

    இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் பெரிய கிரிக்கெட் மைதானமும் அமைக்கப்படும். அமெரிக்காவிலேயே பெரிய மைதானமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிரிக்கெட் விளையாட தெரிந்த நபர்கள் இதனால் சந்தோசம் அடைந்துள்ளனர். மேலும் இனி அந்த மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட ஐசிசி வீரர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    இந்த கிரிக்கெட் மைதானத்திற்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லாதான். அவர் இந்தியாவை சேர்ந்தவர். அவருடைய பேட்டி ஒன்றில் கிரிக்கெட்தான் தனக்கு பிடிக்கும் என்றார். மேலும் இந்த கட்டிடம் குறித்து பேசும்போது ''கிரிக்கெட் விளையாட மன உறுதி வேண்டும். அதன்முலம் நிறைய அலுவலகம் சம்பந்தப்பட்ட விதிகளை புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் பெரிய மைதானம் அமைக்க முடிவு செய்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.

    English summary
    The new giant Microsoft office will have cricket ground. The CEO Sathya Nadella who is cricket admirer decided to build new office with a big cricket ground.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X