For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் ராணுவ தளபதி ரேஸில் 4 பேர்.. நவம்பரில் புதிய தளபதி பொறுப்பேற்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் நவம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், நான்கு பேர் அப்பதவிக்கு வர வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் யாருடைய வருகை இந்தியாவுக்கு நல்லது அல்லது தீயது என்பது முக்கியமானது.

லெப்டினன்ட் ஜெனரல் ஜாவீத் இக்பால் ராம்டே, பகவல்புர் கமாண்டர் ஜுபீர் ஹையாத், ஜெனரல் இஷ்பாக் நதீம் அகமது, முல்தான் கமாண்டர் ஜெனரல் குமர் ஜாவீத் பஜ்வா ஆகிய நால்வரில் ஒருவருக்கு ராணுவ தளபதி வாய்ப்பு.

இதில் ஜாவீத் இக்பால் ராம்தே, ஆளும் கட்சியின் ஃபேவரைட். அரசியல் பின்புலம், சீனியர் போன்ற தகுதிகள் இவருக்கு. 2009ல் தெரிக்-இ-தாலிபானுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலுக்கு தலைமையேற்றவர் அவர்.

The next army chief of Pakistan- These are the four in contention

ஜுபீர் ஹையாத், லாகூர்வாசி. தற்போது உளவுத்துறையை நிர்வகித்து வருகிறார். இவருக்கு அரசியல்வாதிகள் மற்றும் ராணுவம் இரு தரப்பும் ஆதரவு கொடுக்கிறது.

The next army chief of Pakistan- These are the four in contention

இஷ்பாக் நதீம் அகமது, தாலிபான்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை நடத்தியவர். மெரிட் படி இவருக்கு ராணுவ தளபதியாகும் வாய்ப்பு அதிகம்.

The next army chief of Pakistan- These are the four in contention

ஜாவீத் பஜ்வா, தற்போது ராணுவ பயிற்சியகத்தில் தலைமை பொறுப்பிலுள்ளார். இவரது பெயர் பரிசீலனை பட்டியலில் கடைசி இடத்தில்தான் உள்ளதாம்.

The next army chief of Pakistan- These are the four in contention
English summary
India would like to see the back of General Raheel Sharrif. In Indian official circles, it is said that General Sharrif is bad news and the sooner he retires, the better it would be. It is also said that if an extension is given to General Sharrif it would mean a military adventure against India is on the cards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X