For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்வரும் சில வருடங்கள் மோசமாக இருக்கும்.. கவனம் தேவை.. மாமல்லபுர வருகைக்கு பின் ஜின்பிங் அறிக்கை!

எதிர்வரும் சில வருடங்கள் மிக மோசமாக இருக்க வாய்ப்புள்ளது, அதை கவனமாக கையாள வேண்டும் என்று தமிழக சுற்றுப்பயணத்திற்கு பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: எதிர்வரும் சில வருடங்கள் மிக மோசமாக இருக்க வாய்ப்புள்ளது, அதை கவனமாக கையாள வேண்டும் என்று தமிழக சுற்றுப்பயணத்திற்கு பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்து சென்றார். பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் அவர் நேற்றும் நேற்று முதல்நாளும் ஆலோசனை நடத்தினார். சீனா மற்றும் இந்தியா உறவில் இது பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த அதிகாரபூர்வமற்ற மாநாட்டில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள். இரண்டு உறவு, நட்பு என்று பல விஷயங்கள் குறித்து இவர்கள் பேசினார்கள். இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்த அறிக்கை ஒன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

மோடியின் அண்ணன் மகளிடமே கைவரிசை.. ரூ.56,000 பணம், 2 செல்போன் கொள்ளை.. டெல்லியில் பகீர் சம்பவம்!மோடியின் அண்ணன் மகளிடமே கைவரிசை.. ரூ.56,000 பணம், 2 செல்போன் கொள்ளை.. டெல்லியில் பகீர் சம்பவம்!

என்ன அறிக்கை

என்ன அறிக்கை

ஜி ஜின்பிங் தனது அறிக்கையில், இந்தியா சீனா இரண்டு நாடுகளும் வளர்ச்சி மீது சரியான பார்வையை கொண்டிருக்க வேண்டும். இரண்டு நாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். எந்த விதத்தில் பார்த்ததாலும் நம்மிடையே வேற்றுமை தலைதூக்க கூடாது. நாம் நல்ல உறவினர்களாக இருக்க வேண்டும்.

பங்காளிகள்

பங்காளிகள்

நாம் நல்ல பங்காளிகள் போல செயல்பட வேண்டும் . எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் கைகோர்த்து நடக்க வேண்டும். டிராகன் நடனம், யானை நடனத்தை சேர்ந்து செய்வதுதான் சரியாக இருக்கும். இரண்டு நாட்டின் வளர்ச்சிக்கும் அது மிகப்பெரிய உதவியாக இருக்க போகிறது.

வேற்றுமை

வேற்றுமை

இரண்டு நாடுகளுக்கு இடையில் இருக்கும் வேற்றுமைகளை சரியான கண் கொண்டு பார்க்கப்பட வேண்டும். நம்மிடையே இருக்கும் வேறுபாடு, இரண்டு நாட்டு உறவை பாதிக்க கூடாது. அதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இரண்டு நாடுகளும் இதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். சீனா தனது வளர்ச்சியில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி மீதும் கவனம் செலுத்தி வருகிறது. இரண்டு நாடுகளின் வளர்ச்சி பல கோடி மக்களுக்கு பெரிய ஊக்கமளிக்கும்.

புரிந்துணர்வு

புரிந்துணர்வு

சரியான புரிந்துணர்வுடன் நாம் அடிக்கடி ஆலோசனைகளை செய்ய வேண்டும். அடுத்த சில வருடங்கள் மிக மோசமாக இருக்க வாய்ப்புள்ளது. நாம் எதிர் வரும் சில வருடங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். சில முக்கிய பிரச்சனைகளை மிக கவனமாக நாம் கையாள வேண்டும்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

நம்மிடையே தீர்க்க முடியாமல் இருக்கும் பிரச்சனைகளை நாம் மிக மிக கவனமாக கையாள வேண்டும். இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையில் இருக்கும் உறவு நீடிக்க வேண்டும். இரண்டு நாடுகளுக்கு இடையில் அது நம்பிக்கையை, நட்பை ஏற்படுத்த உதவி புரியும், என்று ஜின்பிங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The next few years would be critical for the two countries says Chinese President Xi Jinping after TN visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X