For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி அப்சர்வர்: இன்று உலகின் முதல் ஞாயிறு செய்தித்தாளின் பிறந்த நாள்...

Google Oneindia Tamil News

லண்டன்: கிட்டத்தட்ட 222 ஆண்டுகளுக்கு முன்பு இன்று தான் உலகின் முதல் ஞாயிறு செய்தித்தாள் வெளியிடப்பட்டது.

தி அப்சர்வர் என்ற பெயரில், 1791 டிசம்பர் 4ம் தேதி தான் முதல் ஞாயிரு செய்தித்தாள் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.

ஆரம்பத்தில் அரசு மானியத்துடன் வெளிவந்த இந்த செய்தித்தாளை டபிள்யூ.எஸ்.போர்ன் என்பவர் வெளியிட்டார்.

16 ஆசிரியர்கள்....

16 ஆசிரியர்கள்....

எபிள்யூ.எஸ்.போர்ன்க்குப் பிறகு கிட்டத்தட்ட எட்டு பேரிடம் கைமாறிய ‘தி அப்சர்வர்' செய்தித்தாளில், இதுவரை 16 பேர் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.

இரண்டு நூற்றாண்டுகள்....

இரண்டு நூற்றாண்டுகள்....

222 வருடங்களாக வெளியாகும் அப்சர்வர் தற்போது 2லட்சத்து 16 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையாகிறது. கால ஓட்டத்திற்கேற்ப அதன் வளர்ச்சியும் வேறுபட்டது.

மறுப்பு....

மறுப்பு....

உளவாளி என குற்றம்சாட்டப்பட்டு, பர்சாத் பசோப்ட் எனும் அப்சர்வரின் செய்தியாளர் 1990ல் ஈராக்கில் தூக்கில் போடப்பட்டார். பிறகு அது தவறான தகவல் என மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இணையத்தில்....

இணையத்தில்....

2005ல் இணைய உலகில் அடியெடுத்து வைத்த அப்சர்வர், பத்திரிகையின் உள்நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மக்களுக்கு பகிரங்கப்படுத்துகிற பழக்கத்தை மக்களிடம் தொடங்கி வைத்தது.

எகிப்தில் தடை....

எகிப்தில் தடை....

2008ல் முகமது நபி பற்றிய கார்ட்டூன்களை வெளியிட்டதால் எகிப்தில் அப்சர்வர் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தி கார்டியன்...

தி கார்டியன்...

தி அப்சர்வரின் சகோதர பத்திரிகையாக தி கார்டியன் எனும் புகழ்பெற்ற நாளிதழ் வெளியாகிறது.

நியூஸ் ரூம்....

நியூஸ் ரூம்....

தங்களின் அனைத்து ஆவணங்களும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் லண்டன் நகரில் நியூஸ் ரூம் என்ற மையத்தை அப்சர்வரும் கார்டியனும் இணைந்து நடத்துகின்றன.

இணைய ஆவண வசதி....

இணைய ஆவண வசதி....

1791 முதல் 2003 வரை அப்சர்வரின் பழைய பத்திரிகைகள் இணைய தளத்திலும் கிடைக்கும் வசதியை 2007ல் அறிமுகப் படுத்தியது அப்சர்வர்.

English summary
The Observer is a British newspaper, published on Sundays. In the same place on the political spectrum as its daily sister paper The Guardian, whose parent company Guardian Media Group acquired it in 1993, it takes a social liberal or social democratic line on most issues. First published in 1791, it is the world's oldest Sunday newspaper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X