For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குகையில் அதிசயம்.. 70,000 வருடத்திற்கு முன் வரையப்பட்ட ஹேஷ்டேக்.. ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    70,000 வருடத்திற்கு முன் வரையப்பட்ட ஹேஷ்டேக் கன்டுபிடிப்பு !

    கேப் டவுன்: உலகின் மிகவும் பழமையான ஓவியத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தென்னாப்பிரிக்கா அருகே கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

    உலகில் தற்போது இணையத்தில் ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. # இதை வைத்துதான் எல்லாம் டிரெண்டும் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ஹேஷ்டேக் இப்போது உருவாக்கப்படவில்லை, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது ஹேஷ்டேக்தான் பெரும்பாலும் உலகின் முதல் ஓவியமாக இருக்க வாய்ப்புள்ளது என்றுள்ளனர்.

    எங்கு கண்டுபிடிக்கப்பட்டது

    எங்கு கண்டுபிடிக்கப்பட்டது

    தென்னாப்பிரிக்காவின், புலம்பஸ் என்ற பகுதிக்கு அருகில் உள்ள குகையில் தான் இந்த ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேப் டவுனில் இருந்து தெற்கு முனையில் 200 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பகுதி உள்ளது. இங்கு பல வருடமாக தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இங்குதான் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

    எத்தனை பழமையானது

    எத்தனை பழமையானது

    இது 70,000 வருடம் பழமையானது ஆகும். உலகிலேயே இத்தனை பழமையான ஓவியம் யாரால் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. இதை மனிதர்கள் வரைந்தனரா, இயற்கை மூலம் உருவானதா என்றும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    எப்படி வரைந்தனர்

    எப்படி வரைந்தனர்

    இதில் ஹேஷ்டேக் படம் ஒன்று வரையப்பட்டு இருக்கிறது. இந்த ஹேஸ்டேக் செந்நிற கிரீம் ஒன்றால் வரையப்பட்டு இருக்கிறது. இதனால் இதை மனிதர்கள் வரைந்து இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதை வரைய ''ஒச்சர்'' என்ற வேதியியல் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஒரு ஒற்றுமை

    ஒரு ஒற்றுமை

    இந்த பொருள் பழமையான ஆசிய குகைகளிலும் கிடைக்கும். அதேபோல் ஆப்ரிக்க குகைகளிலும் இது அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அப்போது ஒரே விதமான வரைபடங்கள், வேதியியல் பொருட்கள் உலகம் முழுக்க இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    The Oldest Hashtag: Archaeologists found a 70,000-year-old painting in South Africa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X