For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஜ்மானில் டியர் ஹெல்த் சென்டர் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா !

அஜ்மனில் டியர் ஹல்த் சென்டரினஅ இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் ஷேக் அப்துல் முனேம் பின் நாசர் அல் நுயைமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

அஜ்மான்: அஜ்மானில் டியர் ஹெல்த் சென்டர் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, மகப்பேறு மருத்துவ துறை தொடக்க விழா மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சி ஆகியவை வெள்ளிக்கிழமை (11.11.2016) அன்று நடைபெற்றது.

அஜ்மானில் தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது அலி என்பவரால் கடந்த ஆண்டு டியர் ஹெல்த் செண்டர் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவ நிலையம் அஜ்மான் ரமதா ஓட்டல் பிளாக் ஸ்கொயர் பின்புறம் அமைந்துள்ளது.

 The opening ceremony of the second year

இந்த மருத்துவ நிலையத்தில் பொது மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகள் இருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மகப்பேறு டாக்டர் மீனாட்சி கதிர்வேல் அவர்களை தலைமையாகக் கொண்டு மகப்பேறு மருத்துவ துறை தொடங்கப்பட்டது. மேலும் இரண்டாம் ஆண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு விழாவில் ஷேக் அப்துல் முனேம் பின் நாசர் அல் நுயைமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகப்பேறு மருத்துவத்துறையை தொடங்கி வைத்தார்.

 The opening ceremony of the second year

காலை 9 மணி முதல் இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.

பேச்சுப் போட்டி

இந்த திறப்பு விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஹாதிம் உள்ளிட்ட பல மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவ நிலைய மேலாளர் தமீமுல் அன்சாரி , முஸ்தபா நூரானி உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

 The opening ceremony of the second year

இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை டைம்ஸ் நிறுவனர் மற்றும் சமூக சேவகர் ஹமீது யாசின், காயல் நல மன்ற தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரி, தோப்புத்துறை சஙக பிரமுகர்கள் ஆதம் ஆரிபின், அவுலியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

English summary
The second year opening cermoney of Dear Health Medical Centre in Ajman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X