For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலிபோர்னியாவில் 34 மணி நேரத்தில் 8 முறை நிலநடுக்கம்... கடைசியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம்

Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் மோஜிவா டீசர்ட் பகுதியில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனே தெரியவரவில்லை.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் ரிட்ஜ்சிரேஸ்ட் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதாவது கடந்த 34 மணி நேரத்தில் 6.4 என்ற அளவில் எட்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

The powerful magnitude 7.1 earthquake rocked at Southern California

இதனால் வீடுகள் பயங்கரமாக குழுங்கியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுள்ளார்கள். இதற்கிடையே அந்த பகுதியில் எரிவாயு இணைப்புகள் துண்டாகி மிகப்பெரிய அளவில் தீவிபத்தும் ஏற்பட்டது. சாலைகள் பல இடங்களில் பிளந்து காணப்படுகிறது.

இந்த சூழலில் இன்று தெற்கு கலிபோர்னியாவில் 7.1 என்ற அளவில் மிக அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தேச விவரங்கள் தொடர்பாக தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை. அதே நேரம் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் மாநிலத்தில் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி உச்ச கட்ட அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க மைய அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். முறையான அறிவிப்புடன் அதிபர் டிரம்ப் இங்கு வந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கவின் நியூசோம் தெரிவித்துள்ளார்.

English summary
The powerful magnitude 7.1 earthquake rocked the Mojave Desert town of Ridgecrest at Southern California. jolting the area with eight times more force than a 6.4 quake that struck the same area 34 hours earlier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X