For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கக் காசுகளைத் தயாரித்து புழக்கத்தில் விடும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்

Google Oneindia Tamil News

டமாஸ்கஸ்: ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கென பிரத்யேகமாக தங்கக் காசுகள் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இது அவர்கள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றின் மூலம் உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அந்த தீவிரவாத இயக்கத்தில் ஆட்கள் சேர்ந்து வருகின்றனர். இதனால் வேகமாக பலம் பெற்று வரும் அந்த தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் ஓடும் அந்த வீடியோவிற்கு தி ரைஸ் ஆப் தி கிலாபா அண்ட் ரிடர்ன் ஆப் தி கோல்ட் தினார் எனப் பெயரிடப் பட்டிருந்தது. அதில், தங்களது தீவிரவாத இயக்கத்திற்கென பிரத்யேகமாக தங்கக் காசுகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்தத் தங்கக் காசுகள் தயாரிக்கும் திட்டத்திற்குப் பின்னணியில் ஆழமான பொருள் ஒன்று பதிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவிற்கு அடுத்த அடி...

அமெரிக்காவிற்கு அடுத்த அடி...

அதாவது காகிதப் பணம் மூலம் நிர்வாகம் செய்யப்படும் முதலாளித்துவ நிதிய அமைப்புகளுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். இது, காகிதப் பணத் தயாரிப்பை கண்காணித்து வரும் அமெரிக்காவிற்கு, 9/11 தாக்குதலைத் தொடர்ந்து மிகப் பெரும் அடியாக இருக்கும் என கூறப்படுகிறது.

காகிதப் பணத்திற்கு முற்றுப்புள்ளி...

காகிதப் பணத்திற்கு முற்றுப்புள்ளி...

காகிதப் பணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாகவே இந்த உலோக நாணயங்கள் தயாரிப்பை தொடங்கியிருப்பதாக தீவிரவாதிகள் தங்களது வீடியோ மூலம் உலகத்திற்கு தெரியப் படுத்தியுள்ளனர்.

சந்தையில்...

சந்தையில்...

இந்த உலோக நாணயங்களை தீவிரவாதிகள் சந்தையில் புழக்கத்தில் விடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனை உறுதி செய்யும் வகையில், வீடியோவில் உள்ள காட்சிகளில் சில தீவிரவாதிகள், வியாபாரிகளிடம் இந்த உலோக காசுகளை பரிமாற்றம் செய்யும் காட்சிகளும் உள்ளன. தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு வியாபாரிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிகிறது.

தங்கம் மட்டுமின்றி...

தங்கம் மட்டுமின்றி...

தீவிரவாதிகள் தயாரித்து வரும் இந்த புதிய உலோக நாணயங்கள் தங்கத்தினால் மட்டுமின்றி வெள்ளி, காப்பரிலும் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் ஒரு பக்கத்தில் இஸ்லாமிய சின்னங்கள் பதியப்பட்டுள்ளன. மற்றொரு பக்கத்தில் ஏழு கோதுமைக் கட்டுகள் படம் பதியப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கவுள்ள நாடுகள்...

ஆக்கிரமிக்கவுள்ள நாடுகள்...

இன்னும் சில நாணயங்களில் உலக நாடுகளின் வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன. அவை ஐஎஸ் தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு செய்ய திட்டமிட்டுள்ள பகுதிகள் என அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, ரோம் உள்ளிட்ட நாடுகளின் வரைபடங்களோடு மற்றொரு பக்கத்தில் ஈட்டி, கேடயம் போன்றவை இடம் பெற்ற நாணயங்களையும் தீவிரவாதிகள் தயாரித்துள்ளனர்.

தங்கக் காசுக்கள்...

தங்கக் காசுக்கள்...

காகிதப் பணத்தை விட இந்த உலோக நாணயங்களுக்கு வங்கிகளில் அதிக மதிப்பு என அந்த வீடியோவில் தீவிரவாதிகள் கூறுகின்றனர். அந்தக் காலத்தில் தங்கக் காசுகள்தான் புழக்கத்தில் இருந்தன. அந்த பழைய நாட்களை மீண்டும் இந்தத் தீவிரவாதிகள் கொண்டு வரும் முயற்சியே இது என்று கருதப்படுகிறது.

English summary
The Rise of the Khilafah and Return of the Gold Dinar was a video that the ISIS released two days back. While it has been loosely summarized by many as a new venture to mint gold coins, there is a larger meaning behind it. The hour long video points towards the minting coins not only in gold but in silver and copper as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X