For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஸ்வீட் ஜோஸ்பைன்”- 19 கோடிக்கு ஏலம் போன உலகின் அரிதான “பிங்க்” வைரம்!

Google Oneindia Tamil News

ஜெனிவா: ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் ஒரு லட்சம் வைரங்களில் ஒன்றாக மிக அரிதாக கிடைக்கும் 16.08 கேரட் மதிப்புள்ள மாசில்லாத பிங்க் நிற வைரக்கல்லை கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் 28.5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

சுற்றிலும் வெள்ளை நிறத்திலான சிறிய வைரக்கற்கள் பொறிக்கப்பட்ட மோதிரத்தின் நடுவே வெளிர்சிகப்பு நிறத்தில் உள்ள இந்த வைரக்கல் 23 முதல் 28 மில்லியன் டாலர்கள் வரை ஏலம் போகும் என இந்நிறுவனம் முன்னர் எதிர்பார்த்திருந்தனர்.

The Sweet Josephine: rare pink diamond sold in Geneva auction

ஆனால், நேற்றைய ஏலத்தின்போது கடும்போட்டிக்கு இடையே ஹாங்காங் நகரில் வசிக்கும் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் மிகவும் அரிதான இந்த வைர மோதிரத்தை 28.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்புக்கு கிட்டதட்ட 19 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

தற்போது இந்த வைரக்கல்லுக்கு உரிமையாளராகிவிட்ட சீனர் இதற்கு ஸ்வீட் ஜோஸ்பைன் என பெயரிட்டுள்ளதாக கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
A spectacular pink diamond, the largest of its kind to ever appear at auction, has been sold for US$28.5m (£18.8m/€26.6m), narrowly beating auctioneers’ projections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X