For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏளனமாக சிரித்தபடி.. இசைக்கருவியை தீ வைத்து எரித்த தாலிபான்கள்.. தேம்பி, தேம்பி அழுத இசைக்கலைஞர்

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானின் பாக்டியா மாகாணத்தில் இசைக்கலைஞர் ஒருவரின் இசைக்கருவியை பல்வேறு மக்கள் மத்தியில் தாலிபான்கள் தீ வைத்து எரித்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    ஏளனமாக சிரித்தபடி.. இசைக்கருவியை தீ வைத்து எரித்த தாலிபான்கள்.. தேம்பி, தேம்பி அழுத இசைக்கலைஞர்

    20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரின் முடிவில் தாலிபான்கள் அதிரடியாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றினார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தலிபான்கள் கைக்குள் ஆப்கானிஸ்தான் வந்து விட்டது.

    தாலிபான்களின் கடந்த கால ஆட்சி மிகவும் கொடுமையாக இருந்தது. இதனால் தலிபான்கள் ஆட்சியை பிடித்தது முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் சாரை, சாரையாக வெளியேறினார்கள்.

    வண்டலூர் பூங்காவில் 70 பேருக்கு கொரோனா- ஜன. 31 வரை மூடல்.. 5 வயது சிங்கமும் உயிரிழந்ததால் பரபரப்புவண்டலூர் பூங்காவில் 70 பேருக்கு கொரோனா- ஜன. 31 வரை மூடல்.. 5 வயது சிங்கமும் உயிரிழந்ததால் பரபரப்பு

    தாலிபான்கள் அடக்குமுறை

    தாலிபான்கள் அடக்குமுறை

    'இந்த முறை இவ்வாறு இருக்காது. பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சுதந்திரம் அளிக்கப்படும்' என்று தாலிபான்கள் உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் பேச்சு ஒரு மாதிரி, செயல்பாடு வேறு மாதிரியாக உள்ளது. பெண்களைத் தொடர்ந்து அடிமை போன்றே நடத்துகிறார்கள். உயர்கல்விக் கூடங்களில் பெண்களுக்குத் தனி வகுப்பறைகள், பல்கலைக்கழங்களில் பெண்கள் பணியாற்றத் தடை எனப் பல கட்டுப்பாடுகளைப் பெண்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ளனர்.

    சுதந்திரம் என்பதே இல்லை

    சுதந்திரம் என்பதே இல்லை

    அங்கு பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. இது தவிர பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரத்தை முழுமையாக தாலிபான்கள் நசுக்கி வருகின்றனர். நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன. இப்படி ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அடக்குமுறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

     இசைக்கருவியை எரித்தனர்

    இசைக்கருவியை எரித்தனர்

    இந்த நிலையில் அங்கு தாலிபான்களின் அடக்குமுறை பறைசாற்றும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பாக்டியா மாகாணத்தில் இசைக்கலைஞர் ஒருவரின் முன் இசைக்கருவியை தாலிபான்கள் எரிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆப்கானிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

    தேம்பி, தேம்பி அழுத இசைக்கலைஞர்

    தேம்பி, தேம்பி அழுத இசைக்கலைஞர்

    பல்வேறு மக்கள் கூடி இருக்க உள்ளுர் இசைக்கலைஞரின் இசை கருவிகள் தீப்பிடித்து எரிவதும். இதற்கு தீ வைத்த தாலிபான்கள் துப்பாக்கியை கையில் ஏந்தியபடி ஏளனமாக சிரிப்பதும், தனது இசைக்கருவி எரிவதை பார்த்து இசைக்கலைஞர் தேம்பி, தேம்பி அழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. தாலிபான்கள் ஆப்கனிஸ்தான் திருமணங்களில் நேரடி இசையை தடைசெய்து, ஆண்களும் பெண்களும் வெவ்வேறு அரங்குகளில் கொண்டாட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Taliban have set fire to the musical instrument of a musician in Afghanistan's Baghdad province. Related footage is going viral on the social website
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X