For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது புதிய பனிப்போர்.. அமெரிக்கா செய்வது பெரும் தவறு.. வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய சீனா.. அதிர்ச்சி!

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக புதிய பனிப்போர் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக புதிய பனிப்போர் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அமெரிக்கா செய்வது பெரும் தவறு.. வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய சீனா..

    அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே கொரோனா வைரஸ் பிரச்சனை தொடங்கி வர்த்தக போர் வரை பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டிற்கும் இடையிலான பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கும் என்று கூறுகிறார்கள்.

    இரண்டு நாடுகளும் தென் சீன கடல் எல்லையில் போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா காரணமாக உலகமே முடங்கி உள்ள நிலையில் இந்த சண்டை இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை!தமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை!

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இந்த நிலையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக புதிய பனிப்போர் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில் சீனா மற்றும் அமெரிக்காவின் உறவு மிக மோசமாகி உள்ளது. புதிய பனிப்போர் தொடங்கும் அளவிற்கு மோசமான நிலையை இரண்டு நாட்டு உறவு அடைந்து இருக்கிறது.

    மோசமான பிரச்சாரம்

    மோசமான பிரச்சாரம்

    இரண்டு நாட்டு உறவை காலி செய்ய சிலர் முயன்று வருகிறார்கள். முக்கியமாக அமெரிக்க அரசு தொடர்ந்து சீனாவிற்கு எதிராக தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ரீதியாக ஏற்பட்டு இருக்கும் மோதல் மிக மோசமாக மாற வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் செயல்படும் சில விஷம சக்திகள்தான் இதற்கு காரணம். அவர்கள்தான் இதை திட்டமிட்டு செய்கிறார்கள்.

    என்ன சக்திகள்

    என்ன சக்திகள்

    அந்த சக்திகள்தான் சண்டையை உருவாக்குவது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதற்கு இடையில் அரசியல் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவின் அரசியல் வைரஸ் மிகவும் ஆபத்தானது. சீனாவை எப்படி எல்லாம் தாக்கலாம் என்று இவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். சீனாவிற்கு எதிராக மோசமாக பொய்களை பரப்பி வருகிறார்கள்.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து தொடர்ந்து அவர்கள் பொய்களை பரப்பி வருகிறார்கள். கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து உலக சுகாதார மையம் நடத்த போகும் விசாரணைக்கு ஆதரவு அளிப்போம்.இந்த வைரஸ் தாக்குதல் குறித்த விஷயங்களில் நாங்கள் நேர்மையாக செயல்பட்டோம். வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டோம். இதில் நாங்கள் பொறுப்புடன் இருந்தோம், என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ தெரிவித்துள்ளார்.

    English summary
    The US is pushing China to a new Cold War phase says China after trade war.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X