For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரானின் இன்னொரு முக்கிய தலைவரை கொல்ல திட்டம்.. அமெரிக்கா போட்ட ஸ்கெட்ச்.. கடைசியில் என்ன ஆனது?

ஈரானின் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்த அதே நாளில் இன்னொரு ஈரான் படையை சேர்ந்த முக்கிய தளபதியை கொலை செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டு இருந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரானின் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்த அதே நாளில் இன்னொரு ஈரான் படையை சேர்ந்த முக்கிய தளபதியை கொலை செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டு இருந்துள்ளது. இவரின் பெயர் அப்துல் ரெசா ஷாலாய்.

ஈரானும் அமெரிக்காவும் போருக்கு உண்டான அனைத்து விஷயங்களையும் கடந்த இரண்டு வாரமாக செய்து வருகிறது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடியாக ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் 2 விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது உக்ரைனின் விமானம் ஒன்று ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 176 பேர் பலியானார்கள்.

63 பேர் பலியாகிவிட்டனர்.. எனக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.. ஈரானை மிரட்டும் ஜஸ்டின் ட்ரூடோ! 63 பேர் பலியாகிவிட்டனர்.. எனக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.. ஈரானை மிரட்டும் ஜஸ்டின் ட்ரூடோ!

எப்படி

எப்படி

ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அந்நாட்டை மொத்தமாக கட்டுப்படுத்தி வந்தவர். அந்நாட்டிலேயே அதிக சக்தி வாய்ந்த நபர் இவர்தான். ஈரானில் முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் நாள் இவரின் இறுதி ஊர்வலம் நடந்தது.

இன்னொரு நபர்

இன்னொரு நபர்

அதேபோல் ஈரானில் மூன்றாவது சக்தி வாய்ந்த நபர் என்று பார்க்கப்பட்டவர் அப்துல் ரெசா ஷாலாய். இவர் ஈரான் குவாட்ஸ் படையில் சுலைமானிக்கு அடுத்தகட்டமாக அதிக சக்தி வாய்ந்த நபர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர். சுலைமானி எப்படி ஈராக்கை கட்டுப்படுத்தி வந்தாரோ அதேபோல் ரெசா ஷாலாய் ஏமனை கட்டுப்படுத்தி வந்தார்.

நாடுகள்

நாடுகள்

ஈராக்கில் நடக்கும் புரட்சிக்கும், ஏமனில் நடக்கும் போருக்கும் இவர்கள் இருவர்தான் காரணம். ஈரான் இவர்கள் இருவரை வைத்துதான் அண்டை நாடுகளில் போரை நடத்தி வருகிறது. இவர்களை கொன்றுவிட்டால், போரில் வென்றுவிடலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால்தான் சுலைமானியை அமெரிக்கா டிரோன் தாக்குதல் மூலம் கொன்றது.

மிக மோசம்

மிக மோசம்

ஈரானின் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்த அதே நாளில் ரெசா ஷாலாயை கொலை செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டு இருந்துள்ளது. அப்போது அவர் ஏமனில் இருந்துள்ளார். ஆனால் அவரை கொலை செய்யும் போது கடைசி நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக கைவிடப்பட்டது. டிரோனில் முக்கிய கோளாறு ஏற்பட்டுள்ளது.

என்ன போர்

என்ன போர்

சுலைமானியின் இடது கையாக ரெசா ஷாலாய் பார்க்கப்படுகிறார். ஒருவேளை இவரையும் அமெரிக்கா கொன்று இருந்தால் ஈரான் மொத்தமாக தலைவர் இல்லாத, பாதுகாப்பு இல்லாத நாடாக மாறி இருக்கும். அதேபோல் இவரை கொன்று இருந்தால் அது உடனடியாக போருக்கு வழி வகுத்து இருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் போய் உள்ளது.

English summary
The USA planned for another Drone Strike on the same day when Soleimani gets killed, to kill someone else too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X