For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூஹாரிஸான்ஸ் ப்ளூட்டோவை எட்டிப் பார்க்க உதவிய பெண் சக்திகள்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ப்ளூட்டோவை நெருங்கி நியூஹாரிஸான்ஸ் விண்கலம் சாதனை பயணம் மேற்கொள்ள உதவிய விஞ்ஞானிகள் அணியில் 25 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உறை நிலையில் உள்ள குட்டி கிரகமான ப்ளூட்டோ குறித்து ஆராய, கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நியூ ஹாரிஸான்ஸ் என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவியது.

ஒன்பதரை ஆண்டுகளாக வெற்றிகரமாக விண்ணில் பயணம் செய்து இந்த விண்கலம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ப்ளூட்டோவைக் கடந்து சென்று சாதனை புரிந்துள்ளது.

அப்போது நியூஹாரிஸான்ஸ் எடுத்த புகைப்படங்கள் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக பூமியில் உள்ள நாசா விஞ்ஞானிகள் கைக்கு கிடைத்து வருகின்றன. இதன்மூலம் ப்ளூட்டோ குறித்து பல அரிய தகவல்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், நியூ ஹாரிஸான்ஸ் செயலாக்க அணியில் 25 சதவீதம் பெண்கள் என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் என்ஜீனியர்களும், இயற்பியலாளர்களும் அதிகம் ஆகும்.

இதோ அவர்களைப் பற்றிய தகவல்கள்:

ப்ரான் பேஜ்னல் :

ப்ரான் பேஜ்னல் :

இவர் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்தின் பார்டிகல்ஸ் அண்ட் ப்ளாஸ்மா சயின்ஸ் அணியின் தலைவி ஆவார். மூத்த விண்வெளி ஆய்வாளரான இவர், பவுல்டரில் உள்ள கொலரடோ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஆவார். 80களில் எம்ஐடியில் படிப்பை முடித்தவர்.

ஆலிஸ் போமேன்

ஆலிஸ் போமேன்

மிஷன் ஆபரேஷன் மேனேஜர். செல்லமாக அனைவரும் மாம் என்று அழைப்பாரக்ள். கடைசி நேரத்தில் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்தின் செயல்பாடுகலை நேரடியாக கண்காணஅித்தவர். நியூஹாரிஸான்ஸுக்கு அனுப்பப்பட[ும் அனைத்து கோட்களையும் படிப்பவர் இவர்தாான்.

டிபானி பின்லே

டிபானி பின்லே

சயின்ஸ் ஆபரேஷன் மேனேஜர். விண்கலத்தின் உத்தரவுகள் தொடர்பான பணியில் இருந்தவர்.

யான்பிங் குவோ

யான்பிங் குவோ

மிஷன் டிசைன் லீடர். விண்கலத்தின் பாதையை வடிவமைபக்கும் பொறுப்பில் இருந்தவர். மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய பணியாகும் இது. ஜூபிடர் கிரகத்தின் ஈர்ப்பு விசையை விண்கலப் பாதைக்காக இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

லெஸ்லி யங்

லெஸ்லி யங்

டெபுட்டி திட்ட விஞ்ஞானியாக செயல்பட்டவவர் இவர்.

பிரியா தர்மாவரம்

பிரியா தர்மாவரம்

இந்த பட்டியலில் இந்திய முகமும் உண்டு. அவர்தான் பிரியா தர்மாவரம். இவரும் நியூஹாரிஸான்ஸ் குவுவில் இடம் பெற்றதன் மூலம் இந்தியாவுக்கும் இந்த சாதனையில் ஒரு சின்ன இடம் கிடைத்துள்ளது.

இதோ இதுதான் பெண்கள் அணியின் முழுப் பட்டியல்:

இதோ இதுதான் பெண்கள் அணியின் முழுப் பட்டியல்:

எமி ஷிரா டைடல். சிண்டி கோன்ராட், சாரா ஹாமில்டன், அலிசா ஏர்லி, லெஸ்லி யங், மெலிசா ஜோன்ஸ், கைடி பெக்டோல்ட், பெக்கா செபன், கெல்சி சிங்கர், அமண்டா சங்காரி, கோரலி ஜாக்மன், ஹெலன் ஹார்ட், ப்ரான் பேஜ்னல் , அன் ஹார்ச், ஜிலன் ரெட்பெர்ன், டிபானி பின்லே, ஹீதர் ஏலியட், நிகோல் மார்டின், யான்பிங் குவோ, காதி ஓல்கின், வாலெரி மால்டெர், ரன்யா டெட்போர்ட், சில்வியா ப்ரோடோபாபா, மார்த்தா குஷ்டெரர், கிம் என்னிகா, அன் வெர்பிசர், போனி புராடி, சாரா புசியர், வெரோனிகா ப்ரே, எம்மா பிராத், கார்லி ஹவெட், அலைஸ் போமென், பிரியா தர்மாவரம், சாரா ப்ளானிகன், டெபி ரோஸ், ஷீலா சுர்வாலெக், அட்ரியனா ஒகாம்போ மற்றும் ஜோ அனே கீர்ஸ்கோஸ்கி.

English summary
Kudos to NASA for pointing out that some 25% of the New Horizons team are women, which is quite a bit higher than the percentage of engineers and physicists who are women -- about 15% to 20% at most.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X