For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசம்பர் மாதம் உலகம் எப்படி தாறுமாறா துடிச்சிருக்குன்னு பாருங்க...!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகம் வினோதமான தட்பவெப்பத்தைக் கண்டுள்ளது. உலகின் வெப்ப நிலை தாறுமாறாக இருந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு மாதிரியும், ஆப்பிரிக்காவில் இன்னொரு மாதிரியும், ஆசியாவில் வேறு மாதிரியாகவும் இருந்துள்ளது சூழ்நிலை.

உலகில் அதிகரித்து வரும் புவிவெப்பமும், இன்ன பிற காலநிலை மாற்றத்திற்கான நிரூபணங்களாக இவை அமைந்துள்ளன.

அலாஸ்காவில் அதி பயங்கர குளிர்

அலாஸ்காவில் அதி பயங்கர குளிர்

அலாஸ்கா .. 1918ம் ஆண்டுக்குப் பிறகு அதி பயங்கர குளிரைக் கண்டது. அதாவது 1918ம் ஆண்டுக்குப் பின்னர் மிகக் கடுமையான குளிரைக் கண்ட டிசம்பர் மாதமாக இது இருந்தது.

அமெரிக்காவை அலைக்கழித்த கடும் குளிர், பனி

அமெரிக்காவை அலைக்கழித்த கடும் குளிர், பனி

அதேபோல 1895ம் ஆண்டுக்குப் பின்னர் மிகப் பயங்கரமான குளிரையும், பனிப் புயலையும் சந்தித்தது அமெரிக்கா. 2009ம் ஆண்டு அந்த நாடு சந்தித்த மிகக் கடுமையான குளிர் மாதமாக 2013 டிசம்பர் விளங்கியது. ஒட்டுமொத்தமாக அமெரிக்க வரலாற்றில் இது 21வது அதி பயங்கர குளிர் மாதமாக திகழ்ந்தது.

சுருங்கிய ஆர்க்டிக் கடல் பரப்பு

சுருங்கிய ஆர்க்டிக் கடல் பரப்பு

1979ம் ஆண்டுக்குப் பிறகு ஆர்க்டிக் ஐஸ் கடலின் பரப்பளவு மிகவும் சுருங்கிக் காணப்பட்டது இந்த டிசம்பரில்தான். ஒட்டுமொத்தமாக இது நான்காவது முறையாகும். காரணம், கடுமையான குளிரும், பனியுமே.

இங்கிலாந்து நிலவரம்...

இங்கிலாந்து நிலவரம்...

இங்கிலாந்தில் 1988ம் ஆண்டுக்குப் பிறகு இந்த டிசம்பர் மாதம்தான் குறைந்த வெப்பத்தன்மை உடைய டிசம்பராக திகழ்ந்தது.

நார்வேயை நடுங்க வைத்த கடும் குளிர்

நார்வேயை நடுங்க வைத்த கடும் குளிர்

அதேபோல 1900ம் ஆண்டுக்குப் பின்னர் மிக அதிக அளவிலான குளிரை நார்வே 2013ம் ஆண்டு டிசம்பரில் சந்தித்தது. 1975ம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வளவு குளிரை நார்வே சந்தித்தது இது 2வது முறையாகும்.

மெல்லச் சுட்ட ரஷ்யா...

மெல்லச் சுட்ட ரஷ்யா...

வழக்கமாக டிசம்பர் மாதத்தில் காணப்படும் தட்பவெப்பத்தை விட சற்று வெப்ப நிலை அதிகரித்துக் காணப்பட்டது ரஷ்யாவில். இது 1900ம் ஆண்டுக்குப் பின்னர் இதுதான் முதல் முறையாகும்.

இஸ்ரேலை நடுங்க வைத்த பனிப்பொழிவு

இஸ்ரேலை நடுங்க வைத்த பனிப்பொழிவு

இஸ்ரேலில் டிசம்பர் மாத மத்தியில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அதாவது 30 முதல் 50 சென்டி மீட்டர் அடர்த்தியில் பனிப்பொழிவு இருந்தது. இது வழக்கத்திற்கு மாறானது என்பதால் இஸ்ரேலும் நடுங்கிப் போனது.

பிலிப்பைன்ஸைப் புரட்டிய சூறாவளி

பிலிப்பைன்ஸைப் புரட்டிய சூறாவளி

பிலிப்பைன்ஸில் 2013ம் ஆண்டு நவம்பர் 3 முதல் 11ம் தேதி ஹயான் சூறாவளி புரட்டிப் போட்டது. மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்திலான இந்த சூறாவளிக்கு 6000 பேர் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் வரலாற்றிலேயே பெரும் சீரழிவை ஏற்படுத்திய சூறாவளி இதுதான்.

ஆஸ்திரலேயிாவில் மழையைக் காணோம்

ஆஸ்திரலேயிாவில் மழையைக் காணோம்

ஆஸ்திரேலியாவில் இந்த டிசம்பரில் வழக்கமாக பெய்யும் மழை அளவு குறைந்திருந்தது. குவீன்ஸ்லாந்தில்தான் மழை சுத்தமாக இல்லை. மிகுந்த வறட்சியுடனும், வெப்பத்துடனும் காணப்பட்டது ஆஸ்திரேலியா.

பிரேசிலைப் புரட்டி் போட்ட கன மழை

பிரேசிலைப் புரட்டி் போட்ட கன மழை

பிரேசிலின் தென் கிழக்குப் பகுதிகளில் கன மழை புரட்டிப் போட்டது. வெள்ளம், நிலச்சரிவு என நாடே பதறிப் போனது. பல மாகாணங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. அய்மோரஸ் நகரில் வழக்கமாக பெய்யும் மழையை விட 400 சதவீத அதிக மழை பெய்ததால் நகரமே ஸ்தம்பித்துப் போனது. இந்த கன மழைக்கு 45 பேர் உயிரிழந்தனர்.

அர்ஜென்டினாவில் அனல்

அர்ஜென்டினாவில் அனல்

மறுபக்கம் அர்ஜென்டினாவில் கடும் வெப்பம் தகித்தது. வெப்ப அலையால் மக்கள் வெந்து போய் விட்டனர். பல பகுதிகளில் வழக்கமாக டிசம்பரில் பதிவாகும் வெப்ப நிலையை விட அதிக அளவிலான வெப்ப நிலை பதிவானது.

உருகிப் போன அன்டார்க்டிக் ஐஸ் கடல்

உருகிப் போன அன்டார்க்டிக் ஐஸ் கடல்

ஆர்க்டிக் கடல் உறைந்து போயிருந்த நிலையில் மறு துருவமான அன்டார்க்டிக்கில் நிலைமை தலைகீழாக இருந்தது. அங்கு 1979ம் ஆண்டுக்குப் பின்னர் கடல் பரப்பளவு அதிகமாக இருந்தது. காரணம், ஐஸ் கட்டிகள் கடும் வெப்பத்தில் உருகியதால்.

English summary
The world saw significant climate change in the month of December, 2013. Here is an account.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X