For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை.. ஈரான் திட்டவட்டம்!

Google Oneindia Tamil News

தெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்தது.

ஆனால் கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென விலகியது. இதைத்தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்தது.

அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறையில் 'எமர்ஜென்சி'.. ட்ரம்ப் அதிரடி.. சீனாவுக்கு குறி? அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறையில் 'எமர்ஜென்சி'.. ட்ரம்ப் அதிரடி.. சீனாவுக்கு குறி?

மோதல்

மோதல்

அதற்கு பதிலடியாக, எண்ணெய் வர்த்தக போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில் தடை ஏற்படுத்துவோம் ஈரான் மிரட்டி வருகிறது. இதையடுத்து இருநாடுகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

பதற்றமான சூழல்

பதற்றமான சூழல்

இந்நிலையில் ஈரான் எல்லையில் அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் நிறுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

உச்சக்கட்ட பதற்றம்

உச்சக்கட்ட பதற்றம்

மேலும் மத்திய கிழக்கு பகுதிகளான பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் உள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்க அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் ஏற்பட்டது.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

இந்நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், முகமது ஜாவத் ஸாரிப் ஜப்பானில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா' என்ற கேள்விக்கு, ''அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை,'' என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் அதிகரிப்பு

மேலும் அதிகரிப்பு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துள்ளதால் இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ளது. இருநாடுகளும் பேச மறுப்பதால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

English summary
The Minister of Foreign Affairs of Iran Mohammad Javad Zarif has said that there is no chance of talk with US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X