For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரான் அவசரப்பட வேண்டாம்.. டைம் லிமிட் ஏதும் இல்லை.. நிறைய அவகாசம் இருக்கிறது.. கூலாக சொன்ன ட்ரம்ப்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Donald Trump to Iran : ஈரான் அவசரப்பட வேண்டாம்..கூலாக சொன்ன ட்ரம்ப்!- வீடியோ

    டோக்கியோ: பிரச்சனைக்கு தீர்வு காண ஈரானுக்கு எந்த டைம் லிமிட்டும் அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் நிதானமாக முடிவெடுக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்து தான் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் சூட்டை கிளப்பி வருகிறது.

    சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்

    சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்

    ஈரானை மிரட்டும் வகையில் போர் விமானங்களையும் போர்க்கப்பல்களையும் வளைகுடா பகுதியில் அமெரிக்கா கடந்த 3 மாதங்களாக நிறுத்தியுள்ளது. இந்நிலையில் உளவு பார்க்க வந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

    பத்திரிக்கையாளர் சந்திப்பு இதனைத் தொடர்ந்து ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ட்ரம்ப் அதனை கடைசி நேரத்தில் திரும்பப்பெற்றார். இந்நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள டிரம்ப், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

    பத்திரிக்கையாளர் சந்திப்பு இதனைத் தொடர்ந்து ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ட்ரம்ப் அதனை கடைசி நேரத்தில் திரும்பப்பெற்றார். இந்நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள டிரம்ப், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

    இதனைத் தொடர்ந்து ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ட்ரம்ப் அதனை கடைசி நேரத்தில் திரும்பப்பெற்றார். இந்நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள டிரம்ப், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

    டைம் லிமிட் இல்லை

    டைம் லிமிட் இல்லை

    அப்போது, ஈரான் பிரச்சனை தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப் பிரச்சனைக்கு தீர்வு காண ஈரானுக்கு எந்த டைம் லிமிட்டும் வழங்கப்படவில்லை என்றார்.

    நல்லபடியாக முடியும்

    நல்லபடியாக முடியும்

    தீர்வு காண ஈரானுக்கு நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க தேவையில்லை. எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எல்லாம் நல்லபடியாக முடியும் என நம்புகிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.

    ஈரான் கையில் முடிவு

    ஈரான் கையில் முடிவு

    ட்ரம்பின் இந்த பேச்சால் அமெரிக்கா - ஈரான் இடையேயான பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண்பதற்கான வழி இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் ஈரான் எடுக்கும் முடிவை பொறுத்துதான் பிரச்சனைக்கு தீர்வு எப்படி இருக்கப்போகிறது என்பது தெரியவரும். ஏற்கனவே அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என ஈரான் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    There is no deadline for Iran to solve this issue with US said President Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X