For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகும் சத்து நிறைந்த “சாக்லெட்”- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ரத்த அழுத்தம் போன்றவற்றை குறைக்கும் வகையிலான சத்து நிறைந்த சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது.

சாக்லேட் என்பது பொதுவாக அதில் சர்க்கரை, பால் மற்றும் கொழுப்பு சத்துடன் ரசாயன பொருள் கலக்கப்படும். அவற்றை அதிக அளவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது.

ஆனால் சத்து நிறைந்த அத்துடன் மருந்தாக பயன் படக்கூடிய புதிய வகை சாக்லேட்டை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

பெரு நாட்டின் மூலிகை:

பெரு நாட்டின் மூலிகை:

அதில் மூலிகை தொழில் நுட்பம் கலக்கப்பட்டுள்ளது. போஸ்டனை சேர்ந்த குகா ஸோகோ என்ற நிறுவனம் பொலிவியா மற்றும் பெருநாட்டில் ஆன்டியான் மாகாணத்தில் உள்ள சிறிய வகை மூலிகையில் இருந்து எடுக்கப்படும் சத்து பொருள் மூலம் இந்த சாக்லேட்டினைத் தயாரித்துள்ளது.

இனிப்பற்ற மூலப்பொருள்:

இனிப்பற்ற மூலப்பொருள்:

இதில் இருந்து "ககோயா" எனப்படும் இனிப்பற்ற மூலப் பொருளை எடுத்து கலந்துள்ளனர். "ககோயா" மூலப்பொருளில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் தாதுக்கள் உள்ளன.

மருந்தாகப் பயன்படும்:

மருந்தாகப் பயன்படும்:

அவை மருந்தாக பயன்படுவதாக குகா ஸோகோ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த சாக்லேட்டில் சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்து 35 சதவீதம் மட்டுமே உள்ளது.

ரத்த அழுத்தத்துக்கு ட்ரீட்மெண்ட்:

ரத்த அழுத்தத்துக்கு ட்ரீட்மெண்ட்:

இந்த சாக்லேட் நல்ல கொழுப்பை அதிகரித்து பக்க வாதம் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவதை குறைக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
researchers have reportedly developed a type of chocolate healthy enough to be taken as medicine. It’s already well-known that the main ingredient, cacao, contains antioxidants and minerals that offer health benefits like lowering blood pressure and increasing “good” cholesterol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X