For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த 2 பெண்களும் இரட்டையர்கள் ஆனால் இல்லை: குழப்பமாக இருக்கிறதா?

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் வெவ்வெறு மாநிலங்களில் வசித்து வரும் இரண்டு பெண்கள் ட்வின் ஸ்ட்ரேஞ்சர்ஸ் இணையதளம் மூலம் சந்தித்தபோது ஆச்சரியம் அடைந்தனர்.

காரணம் எந்தவித ரத்த பந்தமும் இல்லாத அவர்கள் பார்க்க அச்சுஅசலாக உள்ளனர்.

நியாம் கீனி என்ற பெண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ட்வின் ஸ்ட்ரேஞ்சர்ஸ் என்ற இணையதளத்தை துவங்கியுள்ளார்.

தன்னைப் போன்றவர்கள்

தன்னைப் போன்றவர்கள்

இந்த இணையதளம் மூலம் மக்கள் பார்க்க தன்னைப் போன்றே உள்ள நபர்களை அடையாளம் காண முடியும். நியாம் தன்னைப் போன்றே இருக்கும் 2 பெண்களை சந்தித்துள்ளார்.

இருவரும் அமெரிக்கர்கள்

இருவரும் அமெரிக்கர்கள்

ஒருவர் அவர் வசித்து வரும் இடத்திற்கு அருகில் வசித்து வருகிறார். அண்மையில் இந்த இணையதளம் மூலம் சந்தித்துக் கொண்டது அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள்.

ஆம்ப்ரா - ஜெனிபர்

ஆம்ப்ரா - ஜெனிபர்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள பயேட்வில்லில் வசித்து வருபவர் ஆம்ப்ரா(23). அவர் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஸ்பிரிங்கிற்கு சென்று ஜெனிபரை(33) சந்தித்தபோது அவரால் அவரது கண்ணையே நம்ப முடியவில்லை.

அச்சு அசல் ஒற்றுமை

அச்சு அசல் ஒற்றுமை

காரணம் எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாத ஆம்ப்ராவும், ஜெனிபரும் பார்க்க அச்சுஅசலாக இருந்தது தான். ஆம்ப்ராவை பார்த்த ஜெனிபரின் தாய் கேரனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. நீயும் என் மகள் தான் என்று ஆம்ப்ராவிடம் தெரிவித்துள்ளார்.

 என்னைப் போல ஒருவர்

என்னைப் போல ஒருவர்

இது குறித்து ஆம்ப்ரா கூறுகையில், நான் அவரை சந்தித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அவருடைய முகம் என் போன்றே உள்ளது. அவரை பார்த்தபோது அவரை கண்ணை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் என்றார்.

English summary
When two women from the US met, they couldn't believe their eyes as they look alike inspite of being strangers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X