For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாஸ்க்கைப் போட விடறானுகளா.. டேய் செல்போனைக் கொடுடா.. பதறி அடித்து ஓடிய டிவி நிருபர்!

Google Oneindia Tamil News

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் டிவி நிருபர் ஒருவர் லைவ் ரிப்போர்ட்டிங்குக்காக மாஸ்க்கை சரி செய்து கொண்டிருந்தபோது ஒரு பிக் பாக்கெட் திருடன், திடீரென நிருபரின் செல்போனைப் பறித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பானது.

கொரோனா காலத்திலும் நடந்த இந்த ரணகளம் தொடர்பான இந்த திருட்டு வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

Thief robs Argentina TV reporters cell phone when doing Live

அந்த நிருபரின் பெயர் டியகோ டிமார்கோ. பியூனஸ் அயர்ஸைச் சேர்ந்த இவர் அங்குள்ள என் விவோ எல் நுவே என்ற டிவியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவ நாளன்று அவர் நேரலை செய்திக்காக தயாராகிக் கொண்டிருந்தார்.

தெருவில் நின்றபடி லைவாக செய்தி தர தயாரானார். அப்போது தனது மாஸ்க்கை சரி செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது திடீரென அவரிடம் ஒருவர் வேகமாக வந்தார். யார் அவர் என்று மார்கோ குழம்பிப் போய்ப் பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மார்கோவின் கையில் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு அந்த நபர் வேகமாக ஓடினார்.

அடடா திருடனா நீ என்று அதிர்ந்து போன மார்கோ அந்த நபரை விரட்டினார். ஆனால் அந்த நபரோ அருகில் இருந்த சந்துக்குள் புகுந்து பாய்ந்தோடி விட்டார். இதனால் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டார் மார்கோ. அக்கம் பக்கத்தினர், மார்கோவுடன் வந்திருந்த டிவி குழுவினரும் விரட்டிப் பார்த்தனர்.. ஆனால் திருடன் ஓடியே போய் விட்டான்.

இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் நேரடியாக அர்ஜென்டினா முழுவதும் பரவி வைரலாகி விட்டது. இப்போது இந்த வீடியோ காட்சிதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 20ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும் அந்த திருடன் பின்னர் பிடிபட்டு விட்டான். செல்போனையும் பறிமுதல் செய்து நிருபரிடம் கொடுத்து விட்டனர்.

செய்தியாளர்களே.. ரொம்பக் கவனமா சூதானமா வேலை பாருங்கப்பா.. பக்கத்துல நாலு பாடிகார்டை வேற நிறுத்தனும் போலயே!

English summary
A Thief robbed Argentina TV reporter's cell phone when he was preparing for Live coverage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X