For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேசியல் ரெக்கோகனைசேஷன்.. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதனமாக திருடிய 2 இளைஞர்கள் கைது!

சீனாவில் நூதன முறையில் நண்பரிடம் திருடிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

பீஜியிங்: சீனாவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நண்பனிடன் திருடிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொழில்நுட்பங்கள் வளர வளர குற்றங்களும் கூடவே வளர்ந்து வருகிறது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் சீனாவில் நிகழ்ந்த ஒரு திருட்டு சம்பவம்.

thieves steal 10000 yuan from sleeping roommate using facial recognition

யுவான் எனும் இளைஞர், சீனாவின் நிங்போ நகரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் அதே ஓட்டலில் வேலை பார்க்கும் இருவர் தங்கி உள்ளனர்.

யுவான் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது போனை மற்ற இருவரும் சேர்ந்து திருடிவிட்டனர். பின்னர் பேசியல் ரெக்கோகனைசேஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், யுவானின் முகத்தை வைத்து அந்த போனை திறந்துள்ளனர். பிறகு வீசேட் செயலி மூலம், யுவானின் வங்கி கணக்கில் இருந்து தங்கள் கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மாற்றிவிட்டனர்.

காலையில் எழுந்த போது தான் தனது வங்கி கணக்கில் இருந்து 10 ஆயிரம் யுவான் (ஒரு லட்சம் ரூபாய் ) காணாமல் போயிருப்பது யுவானுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர் போலீசில் புகார் கொடுத்தார். அப்போது தான் யுவானின் ரூம்மெட் நண்பர்கள் லி மற்றும் யாங் ஆகியோர் அந்த பணத்தை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சைபர் க்ரைம் திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

English summary
In the age of technology, even crimes are getting more high-tech. Case in point: This incident in China where two men stole 10,000 yuan from their sleeping roommate, with the help of his phone's facial recognition feature.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X