For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருடர்களுக்கு தாகம் வந்துருச்சு.. இறக்கை முளைத்து "ரெட் புல்" பறந்து போய்ருச்சு!

By Rajeswari
Google Oneindia Tamil News

பெல்ஜியம்: பெல்ஜியம் நாட்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான "ரெட் புல்" எனப்படும் குளிர் பானத்தை திருடர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

"ரெட் புல்" எனப்படும் பானம் 1989 ஆம் ஆண்டு ஆஸ்திரிய தொழிலதிபர் டயட்ரிச் மட்ஸ்சிட்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பானம் உலகம் முழுக்க பிரபலம் ஆகும். ஆனால் பிரான்ஸ், டென்மார்க் மற்றும் நார்வே போன்ற நாடுகள் "ரெட் புல்"குளிர் பானத்திற்கு தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thieves Steal Red Bull Worth 1 Million Euros In Belgium

இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான "ரெட் புல்" திருடப்பட்டுள்ளன. சுமார் 300 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அந்த குளிர்பானங்களை லாவகமாக திருடிச்சென்றுள்ளனர் திருடர்கள்.

இந்த திருட்டு சம்பவம் பெல்ஜியம் நாட்டின் கென்ட் நகரையும் மேற்கு பிரான்ஸ் நாட்டையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. குளிர் பானங்கள் வைக்கப்பட்டிருந்த டிப்போவில் இருந்து திருடுவதற்கு கிட்டத்தட்ட 12 திருடர்கள், மணி நேரம் எடுத்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் குற்றவாளிகளை பற்றிய தகவல்களை தேடி வருவதாக தெரிவித்தனர்.

மேலும் அந்நாட்டு ஊடகங்கள் ரெட் புல் அதன் ஸ்லோகனில் உள்ளது போன்று இறக்கை முளைத்து பறந்துவிட்டதாக, நகைச்சுவையாக செய்தி வெளியிட்டுள்ளன.

English summary
The energy drink -- whose slogan is "Red Bull gives you wings" -- was stolen on Sunday from an industrial estate in Menin district, on the French border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X