For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”டாட்டூ” வரைந்து வன்கொடுமை வலிகளுக்கு மருந்து போடும் அதிசயப் பெண்!

Google Oneindia Tamil News

பிரேசிலியா: பிரேசிலில் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மன ஆறுதலும், தைரியமும் வகையிலான டாட்டூக்களை இட்டு வருகின்றார் ஒரு பெண்மணி.

வன்முறையில் ஏற்படும் வடுக்களின் வலிகளை மறக்கடிக்கும் மருந்தாக இந்த டாட்டூகள் விளங்கி வருகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற அழியாத தழும்புடன் வரும் பெண்களுக்கு வண்ணங்கள் நிறைந்த இலவச டாட்டூ போடுகிறார் ஃபிலவியா கார்வால்ஹோ.

புற்றுநோய் பாதிப்புக்கும் தீர்வு:

புற்றுநோய் பாதிப்புக்கும் தீர்வு:

ஆண்களால் கத்தி மற்றும் துப்பாக்கி குண்டடிப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாது புற்றுநோயால் பாதிப்படைந்து, அதிலிருந்த மீண்ட பெண்களுக்கும் ஃபிலவியா இதுபோல டாட்டூக்களை போடுகிறார்.

தழும்பை மறைக்க டாட்டூக்கள்:

தழும்பை மறைக்க டாட்டூக்கள்:

ஒருமுறை ஆசைக்கு இணங்க மறுத்த ஒரு பெண்ணின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார் ஒரு ஆண். அந்த தழும்பை மறைக்க வேண்டி இரண்டாண்டுகளுக்கு முன் அந்தப் பெண் ஃபிலவியாவைச் சந்தித்தார்.

மகிழ்ச்சியாகும் பெண்கள்:

மகிழ்ச்சியாகும் பெண்கள்:

ஃபிலவியா போட்ட டாட்டூவைப் பார்த்து அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்த சம்பவம் தன்னை ஆழமாக பாதித்ததால் தாக்குதல்களுக்கு உள்ளான பெண்களுக்கு இதுபோல இலவசமாக டாட்டூ போட தொடங்கியதாக ஃபிலவியா தெரிவித்தார்.

பூவின் மேற்புறம்:

பூவின் மேற்புறம்:

இந்தத் திட்டத்துக்கு "பூவின் மேற்புறம்" எனப் பெயரிட்டுள்ளார் ஃபிலவியா. அவர் வரையும் ஒவ்வொரு டாட்டூவும் இப்பெண்களுக்கு உந்துசக்தியாகவும், சுய மரியாதையின் சின்னமாகவும் விளங்குவதாக அப்பெண்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

English summary
Flavia Carvalho, a tattoo artist born in Curitiba reinvents the term. The project she developed two years ago, dubbed "A Pele da Flor" (The Skin of the Flower), seeks to transform scars on women's bodies into beautiful, empowering and transformative tattoos. In this interview, she discusses her ideas and experience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X