For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஸ்க் போட்ருந்தா மட்டும்தான் 'இந்த’க் கதவு திறக்கும்.. அட இந்த யோசனை நல்லா இருக்கே!

தாய்லாந்து நாட்டில் உள்ள சில கடைகளில், முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்கும் வகையில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

பேங்காக்: தாய்லாந்தில் உள்ள சில கடைகளில், முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கதவுகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்துக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது முகக்கவசங்கள். நமது ஆடைகளின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட முகக்கவசங்கள் இன்றியமையாத பொருட்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டன.

This automatic door will open only if you wear face mask

வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உள்பட பல அரசாங்கங்களும் சட்டம் இயற்றிவிட்டன. ஆனால் பல பேர் இன்றளவும் முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிவதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் தாய்லாந்து நாட்டில் ஒரு சூப்பரான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உன்ன நம்பி கூப்டதுக்கு.. உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட.. செம கோபத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!உன்ன நம்பி கூப்டதுக்கு.. உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட.. செம கோபத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!

தாய்லாந்து நாட்டில் உள்ள சில கடைகளில் சென்சார் மூலம் இயங்கும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கதவுகளுக்கு வெளியே ஒரு ஸ்கேனர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளரின் முகத்தை அந்த ஸ்கேனர் இயந்திரம் முதலில் ஸ்கேன் செய்யும். அந்த வாடிக்கையாளர் முகக் கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கதவு திறக்கும். இல்லை என்றால் கதவு திறக்காது.

மேலும் அந்த ஸ்கேனர் மெஷினே வாடிக்கையாளரின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்துவிடும். அதன் அடிப்படையிலும் கதவு திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுதொடர்பான ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

English summary
Some local shops in Thailand have now come up with a new technology to check if a customer is wearing a mask while entering a shop. It’s a scanner which scans the face of a person entering the establishment for a mask. And, if they don’t have a mask on, the automated doors of the place won’t open. Alongside, it checks the body temperature too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X