For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நமக்கு முன்னாடி ஒருத்தன் வாழ்ந்திருக்கான்.. நம்மை விட அறிவு கம்மிதான்.. ஆனா அவன்தான் நம்மோட "தல"!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மனிதர்களின் மூதாதையர்கள் யார் என்ற ஆய்வு அவ்வப்போது புதிய புதிய முடிவுகளையும், ஆச்சரியங்களையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது மனிதர்களின் புதிய மூதாதையர்கள் குறித்த தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படும் குரங்கு இனத்திற்கும் முன்பு வசித்துள்ளனர் இந்த மூதாதையர்கள். கிட்டத்தட்ட 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மனித இனம் வசித்துள்ளது. இதை முழுமையான மனித இனமாக கூற முடியாது. அதேசமயம், இந்த உயிரினத்திலிருந்துதான் மனிதர்களின் மூதாதையர்கள் உருவாகியிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

இந்த புதிய உயிரினத்திற்கு சிறிய அளவிலான மூளைதான் இருந்துள்ளது. இந்த உயிரினமானது, அதன் வழித்தோன்றல்களாலேயே அழிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. அதாவது மனிதர்கள்தான் இந்த மூதாதையர் இனத்தை அழித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு

இந்த புதிய உயிரினத்தின் படிமங்கள் (Fossils) தென் ஆப்பிரிக்காவில் கண்டுபரிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு முதல் இங்கு ஆய்வுகள் நடந்து வருகின்றன. லீ பெர்ஜர் என்பவரது குழுதான் இந்த ஆய்வில ஈடுபட்டுள்ளது. இவர்களிடம் முன்பு ஒரு தொடை எலும்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது பலவகையான படிமங்களை இந்தக் குழுவினர் அகன்றெடுத்துள்ளனர்.

உயிரைப் பணயம் வைத்து

உயிரைப் பணயம் வைத்து

இதுகுறித்து பெர்ஜர் கூறுகையில் நாங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளோம். மொத்தம் 60 பேர் ஈடுபட்டுள்ளோம். இதில் பலர் 18 மீட்டர் ஆழத்தில் நின்றபடி சேகரித்துக் கொண்டுள்ளனர். எங்களது ஆய்வில் மொத்தமாக 1500 படிமங்களை எடுத்துள்ளோம். அதன் முடிவுகள் ஆச்சரியப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார் பெர்ஜர்.

ஹோமோ நாலெடி

ஹோமோ நாலெடி

இந்த ஆய்வின் மூலமாக ஹோமோ நாலெடி (Homo naledi) என்ற இனத்தை கண்டுபிடித்துள்ளதாக பெர்ஜர் கூறுகிறார். இந்த நாலெடிதான் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து அழிந்த மனிதனின் மூதாதையர் ஆகும். ஒரு குகையிலிருந்து இதுதொடர்பான படிமங்களை பெர்ஜர் குழு எடுத்துள்ளது.

சின்ன மூளை.. குள்ள உடம்பு

சின்ன மூளை.. குள்ள உடம்பு

இந்த படிமங்களை வைத்துப் பார்த்தால், மனித மூதாதையர்களுக்கு சிறிய மூளை இருந்துள்ளது. அறிவுத்திறன் குறைந்து இருந்தது. உருவமும் குள்ளமாக இருந்துள்ளது. இந்த இனமானது 2 லட்சத்து 36 ஆயிரம் ஆண்டுகள் முதல் 3 லட்சத்து 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம்.

மனிதர்களோடு இணைந்து வாழ்ந்துள்ளனர்

மனிதர்களோடு இணைந்து வாழ்ந்துள்ளனர்

இந்த காலகட்டத்தில்தான் தற்போதைய மனிதர்களின் மூதாதையர்களான ஹோமோ ஹேபிலிஸ் (ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நியான்டர்தால்) இனத்தவரும் வாழ்ந்து வந்தனர். வேறு சில மூதாதையர்களும் இருந்தனர்.

English summary
Scientists have found a new species which had lived alongside our ancestors in South Africa, says Science magazine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X