For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவர் ஸ்டோரி என்ற பெயரில் தமிழ் பெண்களை கேவலப்படுத்திய கனடா வார இதழ்.. கொந்தளிப்பில் தமிழர்கள்

தமிழக மணப்பெண்கள் குறித்த கனடா நாட்டின் வார இதழில் அட்டை படத்தில் அரைகுறை ஆடையுடன் மணப்பெண் அமர்ந்திருப்பது போன்ற கவர் ஸ்டோரியை வெளியிட்டிருப்பது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டோரண்டோ: தமிழக மணப்பெண்ணின் சேலை விலகிய நிலையிலான அட்டை படத்தை கனடா நாட்டின் வார இதழ் வெளியிட்டுள்ளது தமிழர்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஜோடி பிரைடல் ஷோ என்ற தென்னிந்திய தமிழ் மணப்பெண்கள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய வார இதழ் ஒன்று வெளிவருகிறது. இதில் தமிழக மணப்பெண்ணின் ஆடை என்ற பெயரில் மிகவும் மோசமான படத்தை அந்த இதழின் அட்டைப் படத்தில் போட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில் பெண் ஒருவர் தொடை தெரியும் விதத்தில் புடவை அணிந்து கொண்டும், ஒரு பக்கம் புடவை விலகிய நிலையிலும், மணப்பெண் அலங்காரத்தில் போஸ் கொடுப்பதற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மோசமானது

மோசமானது

இந்த அட்டைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் இணையதள பயன்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதில் அட்டைப்படத்தில் மாடலாக உள்ள தனுஸ்கா சுப்ரமணியம் அணிந்துள்ளது போல் எந்த மணப்பெண்ணும் சேலை அணிந்ததில்லை.

இதுபோல் காண்பிக்க முடியுமா?

இதுபோல் காண்பிக்க முடியுமா?

இதுபோல் சேலை அணிந்த மணப்பெண்ணை எங்கேயாவது காண்பிக்க முடியுமா? ஒரு குறிப்பிட்ட இனத்தவரை இந்தளவுக்கு கேவலமாக சித்தரிப்பதா? கடந்த காலங்களில் பெண்கள் ரவிக்கை இல்லாமல் இருந்தனர். அதற்காக அவர்கள் இந்த அட்டைப்படத்தில் வருவது போல் தங்களை வெளிகாட்டிக் கொண்டனரா?

கலாசாரம் என்றால் என்ன?

கலாசாரம் என்றால் என்ன?

கலாசாரம் என்பது ஒரு நாட்டின் அடையாளம். எனவே இந்த அட்டைப்படத்தில் இருப்பவர் தமிழ் பெண்ணே இல்லை, தமிழ் கலாசாரத்தை கேலி செய்கிறார்கள் என்று கண்டனக் கணைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

கலையுணர்வு

கலையுணர்வு

இதழின் க்ரியேட்டிவ் டைரக்டர் தட்சிகா ஜெயசீலன் தெரிவிக்கையில், மணப்பெண் தன்னை எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்துக் கொள்ளலாம். இந்த இதழில் மணப்பெண்கள் தங்கள் புடவையையும், நகையையும் எப்படி அணிய விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு சிறப்பிதழ். இது வெறும் அட்டைப்படம் . கலைரசனையுடன் பாருங்க என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் திறமை

தமிழ் திறமை

ஆனால் அந்த அட்டைப்படத்தில் போஸ் கொடுக்கும் தனுஸ்கா சுப்ரமணியமோ, இதில் உள்ள தமிழ் திறமையை கவனியுங்கள். எதிர்மறையாக சிந்திப்பவர்களே இந்த படத்தை குறை சொல்கின்றனர். இவர்களின் கண்டனங்களை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்த அலங்காரம் பிடித்திருக்கிறது. நான் இது போல அட்டகாசமாக இருப்பேன் என்று நினைத்துக் கூடபார்க்கவில்லை என்கிறார்.

English summary
Jodi Bridal Show, is a South-Asian bridal magazine that caters particularly to Indians who live in Canada. The cover of the latest issue shows a woman draped in a Saree with a long slit which exposes her legs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X