For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது.. மணிக்கு 3 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலும் சாத்தியமாமே...

By Mathi
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஒரு மணி நேரத்துக்கு 3 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய ரயில்கள் சாத்தியம்தானா? இதோ சாத்தியமே என்று சொல்கிறார் அதற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் சீன பேராசிரியர் டெங் ஜியாங்.

மணிக்கு சில நூறுகிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்லும் மின்காந்த அதிவேக ரயில்கள் (மெக்லெவ்) ஆசிய நாடுகள் பலவற்றிலும் பிரபலம். சீனாவில்தான் அதிக பட்சமாக மணிக்கு 410 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

உலக நாடுகளிலேயே சீனாவில்தான் 2004ஆம் ஆண்டு அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டன. ஷாங்காய் புதோங் விமான நிலையத்துக்கும் லோங்யாங் லூ ரயில் நிலையத்துக்கும் இடையே இந்த ரயில் இயக்கப்பட்டது.

30 கி.மீட்டரை 8 நிமிஷத்துல..

30 கி.மீட்டரை 8 நிமிஷத்துல..

அதாவது இந்த ரயிலில் பயணித்தால் 30 கி.மீட்டர் தொலைவை 8 நிமிடத்துக்கும் குறைவனா நேரத்தில் சென்றுவிடலாம்.

பயணம் எப்படி இருக்கும்?

பயணம் எப்படி இருக்கும்?

இந்த மிக அதிவேக ரயில்களில் பயணம் செய்யும் போது காற்றழுத்தம் வெளியில் இருப்பதைவிட 10 மடங்கு குறைவாக இருக்கும். காற்றில் மிதப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும்.

501 கி.மீ வேகம்..

501 கி.மீ வேகம்..

சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மணிக்கு 501 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய ரயிலுக்கான வெள்ளோட்டமும் விடப்பட்டுவிட்டது.

3 ஆயிரம் கி.மீ.வேகத்துக்கு ஆய்வு

3 ஆயிரம் கி.மீ.வேகத்துக்கு ஆய்வு

இப்போது ஒரு மணி நேரத்துக்கு 3 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய அதி அதி அதி வேக ரயில்களும் வரப் போகிறதாம். இதற்கான ஆய்வுப் பணிகளைத்தான் சீனாவின் பேராசிரியர் டெங் ஜியாங் மேற்கொண்டு வருகிறார்.

ரயில் அனுபவம்

ரயில் அனுபவம்

இந்த வீடியோவை பார்த்து ரயிலில் பயணம் செய்த அனுபவத்தைப் பெறுங்கள்

http://shanghaichina.ca/video/maglevtrain.html

English summary
How about travelling in a train that can touch the speeds up to 3,000 km per hour? It may sound far-fetched but this is what a researcher in China has planned for our future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X