For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொரீஷியஸில் மகா சிவராத்திரி கோலாகல கொண்டாட்டம்

By Siva
Google Oneindia Tamil News

மொரீஷியஸ்: மகா சிவராத்திரியையொட்டி மொரீஷியஸில் உள்ள கிரேட் பஸ்ஸின் பகுதியில் இருக்கும் சிவன் ஆலயத்தில் பக்தர்கள் கூடினர்.

ஆண்டுதோறும் மாசிமாத தேய்பிறையின்போது வரும் சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் பக்தர்கள் சுத்தபத்தமாக குளித்துவிட்டு நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து சிவ நாமத்தையே உச்சரிப்பார்கள். அன்றைய தினத்தை சிவன் கோவில்களில் செலவிடுவார்கள்.

Thousands celebrate Hindu festival in Mauritius

இரவு நேரத்தில் தூங்காமல் கண்விழித்து சிவனை நினைப்பார்கள். அத்தகைய மகா சிவராத்திரி இன்று தான் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்திய பெருங்கடலில் உள்ள தீவான மொரீஷியஸில் இருக்கும் இந்துக்கள் கிரேட் பசின் பகுதியில் மகா சிவராத்திரியை கொண்டாடினர்.

அங்கு உள்ள ஏரிக்கும் இந்தியாவில் இருக்கும் கங்கை ஆற்றுக்கும் தொடர்பு உண்டு என்று நம்பப்படுகிறது. கிரேட் பசின் பகுதியில் இருக்கும் உயரமான சிவன் சிலை அருகே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர்.

இதனால் அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Thousands of Devotees thronged Great Bassin site in Mauritius to celebrate Maha Sivaratri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X