For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ் தீவிரவாதிகளை விரும்பி மணந்த 3 யு.கே. மாணவிகள் ஈராக்கில் இருந்து தப்பியோட்டம்

By Siva
Google Oneindia Tamil News

மொசுல்: லண்டனில் இருந்து சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்ட 3 பள்ளி சிறுமிகள் ஈராக்கில் உள்ள மொசுல் நகரில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிராதிகளுடன் சேர இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஷமீமா பேகம், அமீரா அபாஸ், கதீஜா சுல்தானா ஆகியோர் பெற்றோருக்கு தெரியாமல் விமானம் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி கிளம்பினர்.

அந்த 3 மாணவிகள் துருக்கி செல்ல விமான நிலையம் சென்றபோது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது.

சிரியா

சிரியா

இங்கிலாந்தில் இருந்து துருக்கி சென்ற மாணவிகள் ஷமீமா, அமீரா, கதீஜா ஆகியோர் அங்கிருந்து சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்துள்ளனர். அந்த 3 பேரும் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பியோட்டம்

தப்பியோட்டம்

தீவிரவாதிகளை திருமணம் செய்த மாணவிகள் மூன்று பேரும் ஈராக்கில் உள்ள மொசுல் நகரில் இருந்து தப்பியோடியுள்ளனர். அவர்கள் மொசுல் நகரை தாண்டவில்லை என்று கூறப்படுகிறது.

தேடல்

தேடல்

மொசுல் நகரில் இருந்து தப்பியோடிய மூன்று மாணவிகளை தீவிரவாதிகள் தேடி வருகிறார்கள். அந்த 3 பேரும் ஆசைப்பட்டு சென்ற தீவிரவாதம் பிடிக்காமல் தான் தப்பியோடியிருக்க வேண்டும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

தீவிரவாதம் ஏன்?

தீவிரவாதம் ஏன்?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தங்களுக்கு தெரிந்த 15 வயது மாணவி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியை மணக்க சிரியா சென்றதை பார்த்து தான் அந்த 3 மாணவிகளும் வீட்டுக்கு தெரியாமல் நகையை திருடி பணம் திரட்டி சிரியா சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Three British school girls who left their home to marry ISIS terrorists have fled the Iraqi town of Mosul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X