For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலவர முகம்.. கையில் 3 பச்சிளம் குழந்தைகள்.. பேச முயற்சித்த நர்ஸ்... கலங்க வைக்கும் பெய்ரூட் படம்

Google Oneindia Tamil News

பெய்ரூட்: கையில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்து கொண்டு, நர்ஸ் ஒருவர் செல்போனில் யாருடனோ பேச முயற்சி செய்கிறார்... முகமெல்லாம் டென்ஷன் நிறைந்த கலவரமாக இருக்கிறது.. அந்த ரூம் முழுக்க ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்திருக்கின்றன.. பெய்ரூட் ஆஸ்பத்திரி ஒன்றில் நடந்த எடுக்கப்பட்ட இந்த போட்டோதான் உலக மக்களை கலங்கடித்து வருகிறது.

Recommended Video

    Beirut விபத்துக்கு பின் இருக்கும் முக்கியமான காரணங்கள்

    பெய்ரூட்டின் வெடிவிபத்து சம்பவ அதிர்ச்சி இன்னும் உலக நாடுகளை விட்டு அகலாமல் உள்ளது.. பெய்ரூட் நகரிலிருந்து 200 கிமீ தூரத்தையும் தாண்டி, சைப்ரஸ் நகரத்திலும் இந்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

    மத்திய தரைக்கடல் பகுதி முழுவதுமே இந்த வெடி சத்தத்தால் ஏற்பட்ட அதிர்வு உணரப்பட்டது.. ஆயிரக்கணக்கான வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தும், காற்று வேகமாக வீசியதால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறி முடிந்துவிட்டன.

    லெபனான் பிரதமர் ராஜினாமா.. பெய்ரூட் வெடிப்பு மட்டுமா காரணம்? நோ சான்ஸ்.. மேட்டரே வேறு.. ரொம்ப மோசம் லெபனான் பிரதமர் ராஜினாமா.. பெய்ரூட் வெடிப்பு மட்டுமா காரணம்? நோ சான்ஸ்.. மேட்டரே வேறு.. ரொம்ப மோசம்

     வெடிவிபத்து

    வெடிவிபத்து

    1 கிமீ தூரத்தில் இருந்த கட்டடங்கள் மொத்தமாக தரைமட்டமாகின.. பொதுவாக இதுபோன்ற விபத்து நடந்தால் கரும்புகைதான் வானத்தில் சூழும்.. ஆனால், இந்த வெடிவிபத்தால், ஆரஞ்சு கலரில் புகை எழுந்தது.. மூச்சு முட்டி மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது.. நூற்றுக்கணக்கானோர் பலி, 4000 க்கும் மேற்பட்டோர் காயம் என அந்நாடு தகவல் கூறுகிறது.

    தவிப்பு

    தவிப்பு

    ஏற்கெனவே தீவிரவாதம், கொரோனா பிரச்சனை, அதனையொட்டி நடந்து வரும் பொருளாதார நெருக்கடி பிரச்னைகளால் சிக்கி தவித்துவரும் லெபனானை, இந்த விபத்து மேலும் படுகுழியில் தள்ளிவிட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 நர்சுகளும் அடக்கம்.. 200 நோயாளிகள் காயமடைந்தனர்.

    நர்ஸ்

    நர்ஸ்

    வெடி விபத்தின்போது, ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த நர்ஸ் ஒருவர் கையில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்து கொண்டு பேசும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த ஆஸ்பத்திரி கட்டிடத்தின் ஜன்னல்கள் சிதறி உடைந்து கிடக்கிறது.. அங்குதான் உட்கார்ந்து இந்த நர்ஸ் பீதியுடன் பேசுகிறார்.

     வெடிசத்தம்

    வெடிசத்தம்

    வெடிச்சத்தம் கேட்டவுடனேயே அந்த மருத்துவமனையிலிருந்த ஏராளமான குழந்தைகளை இந்த நர்ஸ்தான் காப்பாற்றி இருக்கிறார்.. அப்படி காப்பாற்றப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகளை கையில் வைத்து கொண்டே யாருடனோ போனில் பேசுகிறார்.. கலக்கம், பீதி, மரண பயத்துடன் நர்ஸ் போனில் பேசும்போது, அங்கிருந்த பிலாரமெரி என்ற போட்டோகிராபர் இதை போட்டோ எடுத்து, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் போட்டுள்ளார்.

    போட்டோ

    போட்டோ

    மேலும், "என் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூரத்தை பார்த்தது இல்லை.. குழந்தைகள் எல்லாம் ரத்த வெள்ளத்தில் கடந்தன.. இந்த நர்ஸ்தான் கையில் 3 குழந்தைகளை வைத்து கொண்டு யாருடனோ போனில் பேச முயற்சி செய்து கொண்டிருந்தார்.. 16 வருஷமா நான் போட்டோகிராபரா இருக்கேன்.. இப்படி ஒரு போர்க்களத்தை நான் பார்த்ததே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த போட்டோதான் உலகம் முழுக்க வைரலாகி வருகிறது.. யார் இந்த நர்ஸ் என தெரியவில்லை... ஆனாலும் கண்ணீர் மல்க மக்கள் நன்றியுடன் இதை பார்த்து வருகிறார்கள்.

    English summary
    three children in the hands of a nurse fast spreading beirut, viral photo
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X