For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யு.எஸ்.: எல்.கே.ஜி. படிக்கும் வயதில் நகர மேயரான 3 வயது சிறுவன்

By Siva
Google Oneindia Tamil News

மினசோட்டா: அமெரிக்காவில் 3 வயது சிறுவன் ஒருவர் ஒரு நகரின் மேயராக பதவியேற்றுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ளது டார்செட். 22 குடும்பங்கள் வசிக்கும் அந்த ஊருக்கு மேயரை தேர்வு செய்யும் பணி நடந்தது. டார்செட்டில் நடந்த வருடாந்திர உணவு திருவிழாவின்போது மக்கள் தங்களுக்கு பிடித்த நபரின் பெயரை எழுதி ஒரு பெட்டியில் போட்டனர்.

பெட்டியை குலுக்கி அதில் இருந்து ஒரு சீட்டை எடுத்தபோது அதில் மூன்று வயது சிறுவன் ஜேம்ஸ் டப்ட்டின் பெயர் வந்தது. இதையடுத்து ஜேம்ஸ் கடந்த 2ம் தேதி டார்செட் மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முன்னாள் மேயரான அவரது 6 வயது சகோதரர் ராபர்ட் டப்ட் அறிவுரை வழங்கியுள்ளார்.

Three-year-old boy becomes mayor of small town in Minnesota

ராபர்ட் டார்செட்டின் மேயராக 3 மற்றும் 4 வயதில் இருமுறை இருந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ராபர்ட் கூறுகையில்,

மக்களிடம் அன்பாக இருக்கும்படி என் தம்பியிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.

சிறுவன்களின் தாயார் எம்மா டப்ட்ஸ் கூறுகையில்,

என் மகன்களை நினைத்து பெருமையாக உள்ளது. அவர்கள் மக்களுக்கு நிறைய நல்லது செய்கிறார்கள் என்றார்.

English summary
A three-year old boy has become the mayor of a small town in Minnesota on august 2nd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X