For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓமனை தாக்கிய புயல்: 3 ஆண்டு பெய்யும் மழை ஒரே நாளில் பெய்ததில் 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    ஓமன் மற்றும் ஏமனில் சக்திவாய்ந்த புயல் தாக்கி பெருமழை பெய்ததில் 11 பேர் பலி-வீடியோ

    மஸ்கட்: ஓமன் மற்றும் ஏமனில் சக்திவாய்ந்த புயல் தாக்கி பெருமழை பெய்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

    ஏமன் மற்றும் ஓமனில் நேற்று சக்திவாய்ந்த புயல் தாக்கியது. மெகுனு என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த புயலால் பெருமழை பெய்தது. மூன்று ஆண்டுகள் பெய்யும் மழையின் அளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது.

    Three years rainfall received in one day in Salalah

    சலாலாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 278.2 மிமீ மழை பெய்துள்ளது. புயல் மற்றும் மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாயந்தன. தெருக்கள் முழுவதும் உடைந்த கிளைகள், சாய்ந்த மரங்கள் மற்றும் இலைகளாக கிடந்தன.

    இந்த புயல் மழையால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 30 பேர் மாயமாகியுள்ளனர். பலியானவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோஃபார் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு ஓமனில் இதுவரை பதிவு செய்ய்பட்ட புயல்களிலேயே மெகுனு தான் சக்தி வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் பெய்யும் மழை ஒரே நாளில் பெய்ததால் சாலைகளை வெள்ளக்காடாகின.

    English summary
    Extremely strong Mekunu cyclone attacked Oman and neighbouring Yemen. Salalah received 278.2mm three times its annual rainfall in one day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X