For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் பரவும் புதிய வைரஸ்...டிக் போர்ன்...7 பேர் உயிரிழப்பு... மனிதனுக்கு மனிதன் பரவுமா?

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் டிக் போர்ன் வைரஸ் நோயால் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் கொரோனா நோய் நீங்காத நிலையில் இந்த வைரஸ் சீன மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த வைரஸ் மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவும் என்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வைரஸை புன்யா வைரஸ் என்றும் அழைக்கின்றனர்.

Recommended Video

    China-வில் பரவும் புதிய வைரஸ்...7 பேர் உயிரிழப்பு

    நடப்பாண்டின் முதல் அரையாண்டில் கிழக்கு சீனாவில் இருக்கும் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த 37 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் அன்ஹுயி மாகாணத்தில் 23 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜியாங்சு மாகாணத்தில் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளார். முதலில் காய்ச்சல், இருமல் என்ற அறிகுறிகளுடன் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர், உடலில் leukocyte ரத்த அணுக்கள் குறைவு ஏற்பட்டுள்ளது.

    tick-borne virus spread in China killed 7 people and 60 affected

    இந்த வைரஸால் அன்ஹுயி ஜிஜியாங்க் மாகாணத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் புதியது இல்லை. 2011ஆம் ஆண்டில் இருந்து காணப்படுகிறது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ட்ரம்ப் உதவ மாட்டார்.. அவர் பிளான் வேற.. போட்டு உடைத்த மாஜி அதிகாரிசீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ட்ரம்ப் உதவ மாட்டார்.. அவர் பிளான் வேற.. போட்டு உடைத்த மாஜி அதிகாரி

    இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஜிஜியாங் பல்கலைக் கழகத்தின் மருத்துவர் ஷெங் ஜிபாங்க் கூறுகையில், இந்த வைரஸ் மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் ரத்தம் மற்றும் சளி மூலம் பரவும். எச்சரிக்கையுடன் இருந்தால் போதும், இதற்காக மக்கள் அதிர்ச்சி அடைந்து குழப்பம் அடைய வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    tick-borne virus spread in China killed 7 people and 60 affected
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X