For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு சம்பவங்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: துப்பாக்கி கலாசாரத்திற்காக உலக அளவில் விமர்சனங்களை சந்தித்து வரும் அமெரிக்காவில் இன்று மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

லாஸ்வேகாஸில் உள்ள மண்டாலே பே விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சாலையில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் மக்கள் ஆங்காங்கே ஓடத் தொடங்கினர். இதில் 20 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் லாஸ்வேகாஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Timeline of mass shootings in the US since 2012

அமெரிக்காவை சமீபகாலமாக உலுக்கிய மிகப்பெரிய துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறித்த ஒரு பிளாஷ்பேக்:

2016-ஜூன் 12: புளோரிடா மாகாணத்தின் ஒர்லான்டோ நகரில் உள்ள ஓரின சேர்க்கையாளர்களுக்கான நைட் கிளப்பில் அடிப்படைவாதி ஒருவன் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் கொல்லப்பட்டனர், 53 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் மிகப்பெரிய துப்பாக்கி சூடு சம்பவங்களில் இது முக்கியமானது.

2015, டிசம்பர் 2: ஆணும், பெண்ணும், சான்பெர்னார்டினோ பகுதியிலுள்ள ஹாலிடே பார்ட்டிக்குள் நுழைந்து சரமாரியாக சுட்டதில் 14 பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர்.

2015, அக்டோபர் 1: ஒரேகான் பகுதியிலுள்ள கிறிஸ்்டோபர் ஹார்பர்-மெர்செரென்டர்ஸ் கல்லூரியில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

2015, ஜூன் 17: தெற்கு கலிபோர்னியாவின், சார்லெஸ்டன் பகுதியிலுள்ள கறுப்பினத்தவர்களுக்கான தேவாலயத்தில் நுழைந்த 21 வயது இளைஞர் 9 பேரை சுட்டு கொன்றான்.

2015, மே 17: டெக்சாஸ் மாகாணத்தில், மோட்டார் சைக்கிள் குரூப்கள் நடுவேயான மோதலில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2013, ஜூன் 7: சாந்தா மோனிகா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளியை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.

2012, டிசம்பர் 14: சான்டி ஹூக் துவக்க பள்ளியில் தனது தாயையும் 26 பேரையும் சுட்டு கொன்ற கொலையாளி, தன்னையும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

2012, ஜூலை 20: 25 வயது வாலிபர் தி டார்க் நைட் ரைசஸ் திரைப்படம் திரையிட்ட தியேட்்டரில் புகுந்து 12 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஆரோரா பகுதியில் நடந்தது.

English summary
Timeline of mass shootings in the US since 2012, This timeline offers a glimpse of some, but not nearly all, highly publicized mass shootings in the U.S.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X