For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன இருந்தாலும் டிரம்ப்பை இப்படி அவமானப்படுத்த கூடாது பாஸ்!

அதிபர் ட்ரம்ப் சிலையை வைத்து ஒருவர் அவமானப்படுத்தி உள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: சர்ச்சைகளின் முடி சூடா நாயகன் அதிபர் டிரம்ப் பற்றின செய்திதான் இது.

அதிபரின் நடவடிக்கை, அதிபரின் பேச்சு, அதிபரின் செயல் பலருக்கு அதிருப்தி தரக்கூடியதுதான். அதனால் ட்ரம்ப் எது செய்தாலும் பேசினாலும் அவரை எதிர்மறை கருத்துக்களை போட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து விடுவார்கள்.

[ ஊதுன்னுதானே சொன்னாங்க.. அதுக்கு ஏய்யா இப்படி ஒரு பேயாட்டம்! ]

 புது ஐடியா

புது ஐடியா

ஆனால் ஒருவர் மட்டும் வித்தியாசமாக எதிர்ப்பு காட்டியுள்ளார். இணையத்தில் கமெண்ட், ட்வீட் இதெல்லாம் செய்யவில்லை. இன்னும் பெரிசா எதிர்ப்பு காட்டணும்னு முடிவு பண்ணிட்டார். இதுக்காக ரூம் போட்டு ஒரு ஐடியா யோசித்தார்.

 சிலை வைத்தார்

சிலை வைத்தார்

அதன்படி புரூக்ளின் நகரத்தில் ரோட்டோரம் கொஞ்சமாக புல் வளர்த்தார். சிறிய அளவில் வளர்ந்த புல்லுக்கு நடுவில் ஒரு சிலை வைத்தார். அது நம்ம ட்ரம்ப் சிலைதான். சுமார் ஒரு அடி உயரத்துக்கு மார்பளவு சிலை இது. இந்த சிலைக்கு கீழே "என் மீது சிறுநீர் கழிக்கவும்" என்று எழுதி வைத்துவிட்டார். ம்ஹூம்... பொன்னெழுத்துக்களால் பொறித்தே வைத்துவிட்டார். இதேபோல குட்டிக் குட்டியாக நிறைய சிலைகளை அந்த பூங்கா முழுவதும் வைத்தார்.

 சிறப்பாக செயல்படவில்லை

சிறப்பாக செயல்படவில்லை

இப்படி சிந்தித்த சிந்தனையாளர் பெயர் பில் கேப்லே. இப்படி ஒரு சிலையை எதுக்காக செஞ்சு வச்சிருக்கீங்கன்னு கேட்டால், அதுக்கு பில் கேப்லே "டிரம்ப் ஒரு அதிபராக செயல்படவே இல்லை. இந்த கோபத்தை வெளிப்படுத்த தான் இப்படி சிலையை வெச்சிருக்கேன்"ன்னு பதில் சொல்றார்.

இளமை, புதுமை

சரி, ஏன் இளம் லுக்கில் இருக்கும் டிரம்ப் சிலையை வைத்தீர்கள் என்று கேட்டால், தன்னை ஒரு இளைஞர் போல நினைத்துக் கொண்டு செயல்படுகிறார் டிரம்ப். அதை உணர்த்தவே இந்த தோற்றத்தை தேர்வு செய்தேன் என்று கூரியுள்ளார் பில்.

 அதிர்ச்சி - சர்ச்சை

அதிர்ச்சி - சர்ச்சை

உலகத்தையே தன் கைக்குள் வைத்து ஆட்டிப்படைக்க நினைக்கும் அமெரிக்க நாட்டில், நியூயார்க் என்ற ஒரு மாபெரும் நகரில்.. அதுவும் பல புகழ்களை அடக்கிய புரூக்ளின் பகுதியில்... அந்த நாட்டு அதிபரையே இப்படி சிலைகள் வைத்து "என் மீது சிறுநீர் கழிக்கவும்" என்று எழுதி அசிங்கப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Tiny Trump statues with sign ‘Pee On Me’ installed across Brooklyn
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X