For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது இசைக்கப்பட்ட வயலின் ஏலம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அங்கு இசைக்கப்பட்ட பிரபரமான வயலின் ஏலம் விடப்படுகிறது.

கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி இங்கிலாந்தின் சவுத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது பயணத்தை தொடங்கிய ‘டைட்டானிக்' என்ற பயணிகள் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

Titanic Violin May Fetch World Record Price

பயணத்தின் போது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சோக விபத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகினர்.

கப்பல் மூழ்கிய போது அதில் இருந்த இசைக் குழுவினர் பேண்ட்மாஸ்டார் வால்லேக் ஹேர்ட்லி தலைமையில் வயலின் இசைத்த படியே இருந்தனர். கப்பலில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல் பயணிகளுடன் கடலில் மூழ்கி மரணத்தை தழுவினர்.

இதற்கிடையே, மூழ்கிய கப்பலில் இருந்து சில பொருட்கள் மீட்கப்பட்டன. அவற்றில் பேண்ட் மாஸ்டர் வால்லேக் ஹேர்ட்லின் இசைத்த வயலினும் அடங்கும். அந்த வயலினில் மூழ்கி இறந்த இசைக்கலைஞர் வேல்லேக் ஹேர்ட்லியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

தெற்கு இங்கிலாந்தில் உள்ள வில்ட்ஷின் மையத்தில் இந்த வயலின் ஏலம் விடப்பட உள்ளது. இந்த வயலினுக்கு 2 லட்சம் பவுண்ட் முதல் 3 லட்சம் பவுண்ட்டுகள் வரை ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 4 லட்சம் பவுண்டுகள் வரை ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

English summary
The violin famously played by the Titanic's bandmaster as the liner sank beneath the waves is expected to fetch a world record price when it goes under the hammer today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X