For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்கல் தாக்கி உயிரிழந்த முதல் மனிதர் இந்தத் தமிழர்தானா?

Google Oneindia Tamil News

நாசா: விண்கற்கள் தாக்கித்தான் டைனோசர்கள் அழிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விண்கல் தாக்கி மனிதர்கள் யாரும் இறந்ததாக இதுவரை வரலாறு இல்லை, பதிவும் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியில் விண் கல் தாக்கி இறந்ததாக கூறப்படும் நபர்தான் முதல் மனிதப் பலியாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

நாட்ராம்பள்ளியில் உள்ள தனியார் பொறியில் கல்லூரி வளாகத்தில் சமீபதில் வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள் வெடித்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பேருந்துகள், கல்லூரியின் கண்ணாடி ஜன்னல்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன.

முதலில் வெடிகுண்டு வெடித்ததாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் அது விண்கல் என கூறப்பட்டது. இதை முதல்வர் ஜெயலலிதாவும் தெரிவித்துள்ளார்.

முதல் மனிதப்பலி...

முதல் மனிதப்பலி...

இந்த நிலையில் இப்படி விண்கல் விழுந்து இதுவரை மனிதர்கள் யாரும் இறந்ததாக எங்குமே தகவல் இல்லை என்பதால் இதுதான் முதல் மனிதப் பலியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

பதிவுகள் இல்லை...

பதிவுகள் இல்லை...

இதுவரை விண்கற்கள் விழுந்து எங்குமே மனிதர்கள் பலியானதாக உலக அளவில் எந்தத் தகவலும் இல்லை, பதிவும் இல்லை. சர்வதேச விண்கற்கள் பத்திரிகையும் கூட இதுவரை யாரும் விண்கல் விழுந்து இறந்ததாக தகவல் இல்லை எனக் கூறியுள்ளது.

வீடுகள் மீது...

வீடுகள் மீது...

வீடுகள் மீது விண்கற்கள் விழுந்த சம்பவங்கள் உண்டு. ஆனால் யாரும் இதுவரை உயிரிழந்ததில்லை.

நாட்ராம்பள்ளி சம்பவம்...

நாட்ராம்பள்ளி சம்பவம்...

விண்கற்கள் பூமியில் பாதிப்பை ஏற்புடுத்தியதுண்டு. ஆனால் உயிர்ப்பலி ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அந்த வகையில் இந்த நாட்ராம்பள்ளி சம்பவம்தான் விண்கல்லால் ஏற்பட்ட முதல் மனிதப் பலியாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது.

ரஷ்யாவில் பாதிப்பு...

ரஷ்யாவில் பாதிப்பு...

கடந்த 2013ம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரில் மிகப் பெரிய விண்கல் வெடித்து பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. அப்போது கூட யாரும் உயிரிழக்கவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் அவ்வளவுதான். கட்டடங்கள் பெரும் சேதமடைந்தன. ஆனால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian officials say a meteorite struck the campus of a private engineering college on Saturday, killing one person. If scientists confirm the explosion was due to a meteorite, it would be the first recorded human fatality due to a falling space rock.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X