• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊர்ல எல்லோரும்தான் டாய்லெட் போறாங்க.. ஆனா இவங்களுக்கு மட்டும் ஏங்க இப்படியெல்லாம் நடக்குது??

|

லண்டன்: "இந்த. வீட்ல எல்லோரும்தான் கக்கூஸ் போறாங்க.. உங்களுக்கு மட்டும் ஏங்க இப்படியெல்லாம் நடக்குது"... இது வடிவேலுவைப் பார்த்து அவரது மனைவி ஒரு படத்தில் கூறும் வசனம். இந்த வசனம் இந்த செய்திக்கும் பொருந்தும்.

எந்த இடத்தில் பாம்பு வந்தாலும் தைரியமாக பேஸ் செய்து விடலாம்.. ஆனால் உட்காரும் இடத்தில் வந்தால்.. அதாவது டாய்லெட் போவதற்காக உட்காரும் இடத்தில் வந்தார்.. நினைக்கவே கலக்கமாக இருக்குல்ல...!

ஆனால் பல ஊர்களில் இதுபோன்ற இக்கட்டான, சிக்கலான சம்பவங்கள் நடந்து சில பல காமெடிகள் அரங்கேறியுள்ளன. வாங்க அப்படி மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டவர்களை நாம போய் "வேடிக்கை" பார்க்கலாம்...!

அந்த இடத்தில் 5 அடி!

அந்த இடத்தில் 5 அடி!

சான்டியாகோவில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது. ஒருவர் தனது அலுவலகத்தில் உள்ள டாய்லெட்டுக்கு டபுள்ஸ் போஸ போயிருக்கிறார். போய் உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே ஏதோ சத்தம் கேட்டு குனிந்து பார்த்துள்ளார். டாய்லெட் போகும் இடத்தில் ஒரு 5 அடி நீள பாம்பு சுருண்டு படுத்துக் கிடந்தது. மனிதர் அப்படியே ஆடிப் போய் விட்டார். அலறியடித்து ஓடி வந்த அவர் இன்னும் அந்த பயம் நீங்காமல் உள்ளாராம்.

"அங்க" பார்த்து ஒரு கடி

இஸ்ரேலில் நடந்தது பெரிய சோகம்தான். இஸ்ரேலைச் சேர்ந்த அந்த நபர் டாய்லெடுக்குப் போயுள்ளார். போய் உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே சுருக்கென அவரது ஆணுறுப்பில் ஏதோ கடித்தது போல தெரிந்தது. கொசு கடித்ததோ என்று கீழே குனிந்து பார்த்துள்ளார். அங்கு ஒரு பாம்பு உட்கார்ந்திருந்தது.. பிறகென்ன ஓடினார் ஓடினார் மருத்துவமனையை நாடி ஓடினார்.. நல்லவேளை பெரிய காயம் ஏதும் இல்லை.. பாம்பும் விஷப் பாம்பில்லை என்று தெரிய வந்தது. மனிதர் தப்பிப் பிழைத்தார்.

தொடையைக் குறி வைத்த எலி

தொடையைக் குறி வைத்த எலி

அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. அங்கு 55 வயதான மேக்ஸின் கில்லிங்பேக் என்ற பெண்மணி, டாய்லெட்டுக்குப் போயுள்ளார். சற்று நேரத்தில் திடீரென டாய்லெட்டுக்குள்ளிருந்து ஒரு பெரிய எலி அவரது கால் இடுக்கு வழியாக குதித்து வந்து தொடையைப் பலமாக கடித்து விட்டு எகிறிக் குதித்து ஓடியது. அலறியடித்த அவர் எழுந்து நின்றார். பார்த்தால் டாய்லெட்டுக்குள் மேலும் சில எலிகள்.. உடனடியாக டாய்லெட் மூடியை வேகமாக மூடி மற்ற எலிகளும் வெளியே வந்து விடாமல் தடுத்து நிறுத்தினார். பெரிய சைஸ், கருப்பு நிறத்திலான எலி என்னைக் கடித்து விட்டது என்றார் மேக்ஸின். அதாவது பெருச்சாளி கடித்து விட்டதாம்.

சிங்கப்பூரிலும் அதே கடி

சிங்கப்பூரிலும் அதே கடி

சிங்கப்பூரில் 1993ம் ஆண்டு ஒரு தடகள வீரரை ஆணுறுப்பில் பாம்பு கடித்து விட்டது. டாய்லெட்டுக்குப் போன அவர் உட்கார்ந்தபோது அங்கு மறைந்திருந்த குட்டிப் பாம்பு, அந்த வீரரின் விதைப் பையை கடித்து விட்டது. அலறித் துடித்த அவர் மருத்துவமனைக்கு ஓடினார். அதிர்ஷ்டவசமாக பெரிய ஆபத்து இல்லாமல் போனதால் தப்பினார் மனிதர்.

அடைப்பை எடுக்கப் போனால்

அடைப்பை எடுக்கப் போனால்

2011ல் நடந்த சம்பவம் இது. அந்தப் பெண் டாய்லெட் போய் விட்டு பிளஸ் அவுட் செய்தார். ஆனால் ஆகவில்லை. அடைத்துக் கொண்டு நின்றது. உடனே பாத்ரூமில் இருந்த பெரிய குச்சியை எடுத்து குத்திப் பார்த்தார்.. அப்போது உள்ளே இருந்து ஒரு பெரிய பாம்பு நைசாக வெளியே வர.. அதிர்ந்து போய் விட்டார் அப்பெண்.. அப்ப இவ்வளவு நேரம் பாம்பு மேலயா "இருந்தோம்" என்ற நினைப்பே அவரை பல நாள் தூங்க விடவில்லையாம்.!

பூரான், கரப்பான், அட அனில் கூட!

பூரான், கரப்பான், அட அனில் கூட!

இதேபோல பல இடங்களில் பூரான்களைப் பார்க்கலாம். சில பாத்ரூம்களில் கரப்பான் தொல்லை பயங்கரமாக இருக்கும். இங்கிலாந்தில் ஒருவரது கழிப்பறைக்குள் அனில் புகுந்து விட "ஆய்" போவதற்காக உள்ளே போனவர் அலறித் துடித்து வெளியே வந்த கதையும் நடந்துள்ளது.

இனிமேல் டாய்லெட்டுக்குப் போனீங்கன்னா.. பார்த்து உக்காருங்கப்பா!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Some might have experienced different incidents while going to Toilet. Rat bite, Snake bite are some of them. Here is a round up.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more