For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி கொரோனா கூடவே உட்கார்ந்து ஒரு ஆஃப் அடிக்கலாம்.. தொத்திக்கும்னு பயமே இல்லையே!.. பாரில் புதுமுயற்சி

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பார்களில் வாடிக்கையாளர்கள் கொரோனா அச்சமின்றி குடிக்க ஏதுவாக சிறப்பு ஷீல்டுகளை அமைத்துள்ளனர்.

Recommended Video

    Corona Vaccine உற்பத்தி.. India- ன் உதவியை தேடி வரும் Russia

    உலகம் முழுவதும் கொரோனா அச்சம் இருக்கும் போதிலும் தற்போது பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடைகளில் வாடிக்கையாளர்களை கவர முகக் கவசம், கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுகிறார்கள்.

    இது போல் செய்யாத கடைகளில் சுகாதாரம் பார்க்காத ஆட்கள் மட்டுமே வந்து செல்கிறார்கள். அதனால் முகக் கவசமும், கிளவுஸும் தற்போது முக்கியமாகியுள்ளது.

    எஸ்ஐ அடிச்சுட்டாரு.. சாகப்போறேன். என் ஆன்மா சும்மா விடாது.. மந்திரவாதி மரண வாக்குமூலம் எஸ்ஐ அடிச்சுட்டாரு.. சாகப்போறேன். என் ஆன்மா சும்மா விடாது.. மந்திரவாதி மரண வாக்குமூலம்

    கிருமிநாசினி

    கிருமிநாசினி

    அது போல் ஹோட்டல்களில் உணவு பரிமாறுபவர்களும் இது போன்று முகக் கவசம், கைகளுக்கு கிளவுஸ் அவ்வப்போது தரைகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கேற்ப மதுக்கடைகள், பார்கள் என திறக்கப்பட்டு வருகின்றன.

    மதுக்கடைகள்

    மதுக்கடைகள்

    அது போல் ஜப்பானில் மது கடைகள் ஜூன் கடைசி வாரத்தில்தான் திறக்கப்பட்டன. இங்கு பார்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கிடைக்கும் வாடிக்கையாளர்களை கை நழுவ விடக் கூடாது என்பதற்காக பார் ஊழியர்கள் பல பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்கிறார்கள்.

    மீன் கப்

    மீன் கப்

    பார்களில் உள்ள இருக்கைகளுக்கு மேல் மீன் கப் போன்று பெரிய ஃபைபரால் ஆன இழைகள் உள்ளன. அதன் கீழ் உட்கார்ந்தால் நமது மார்பு வரை அது கவர் ஆகும். இதனால் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே எந்த உடல் ரீதியிலான தொடர்பும் இருக்காது. அப்படியிருந்தும் 70 முதல் 80 சதவீதம் வரை மட்டுமே வருமானம் வருவதாக பார் உரிமையாளர்கள் வருந்துகிறார்கள்.

    கூம்பு வடிவம்

    கூம்பு வடிவம்

    இதுகுறித்து ஜாஸ் லாஞ்ச் என் கவுன்ட்டர் பாரின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில் கொரோனாவுக்கு முன்பு இருந்த வருமானத்தை மீண்டும் பெறவும் தற்போது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஒரு கூம்பு வடிவத்தில் ஒளி புகக் கூடிய ஸ்கிரீன்கள் விட்டத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

    தோள் பட்டை

    தோள் பட்டை

    இதன் கீழ் வாடிக்கையாளர்கள் அமர்ந்தால் தலையும் தோள்பட்டையும் மறைக்கும் வரை கவராகும். இது ஒரு வாடிக்கையாளருக்கும் இன்னொரு வாடிக்கையாளருக்கும் இடையே பாதுகாப்பு அரணாக இருக்கும். அது போல் ஊழியர்களுக்கும்தான். இந்த புதிய முயற்சியால் கொரோனா அச்சமின்றி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடிவதாக ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள் என்றார்.

    பாதுகாப்பு ஸ்கிரீன்கள்

    பாதுகாப்பு ஸ்கிரீன்கள்

    இதுகுறித்து வாடிக்கையாளர் கூறுகையில் இந்த புதிய பாதுகாப்பு ஸ்கிரீன்கள் இல்லாவிட்டால் என்னால் ஊழியருடன் பேசுவதற்கே அச்சமாக இருக்கும். அதாவது அவருடன் பேசினால் எங்கே அவரது வாயிலிருந்து எச்சிலோ, தும்மும் போது மூக்கிலிருந்து நீர் துளிகளோ பட்டுவிடும் என்ற அச்சம் இல்லாமல் பாதுகாப்பாக உணர்கிறேன் என்றார்.

    English summary
    Tokyo bar uses special screens to attract customers back bars opened after coronavirus lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X