For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலிய பிரதமராக டோனி அப்பாட் பதவியேற்றார்!

By Mathi
Google Oneindia Tamil News

கான்பெரா: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக டோனி அப்பாட் இன்று பதவியேற்றார். அவருடன் 19 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்றது.

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டோனி அப்பாட் பிரதமராக பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

Tony Abbott, left, poses with Governor General Quentin Bryce

கான்பெராவில் அரசு இல்லத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் டோனி அப்பாட் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அப்போது பேசிய அவர், இது பதவியேற்புக்கான நாள் மட்டுமல்ல.. செயல்பாட்டுக்குரிய நாள் என்றார்.

இன்று டோனி அப்பாட்டுடன் 19 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்றது. ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே தமது அமைச்சரவை தான் அனுபவசாலிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது என்றும் டோனி அப்பாட் கூறியுள்ளார்.

English summary
Tony Abbott has been sworn in as Australia's prime minister, days after his Liberal-National coalition ended six years of Labor government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X