For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓவர் வெயிட்... விமானத்தில் ஏற்ற மறுத்த பிரிட்டிஷ் விமான நிறுவனம்: தவிக்கும் குடும்பம்

Google Oneindia Tamil News

சிகாகோ: ஹார்மோன் பிரச்சினையால் உடல் பருமனான நோயாளியை விமானத்தில் பயணிக்க வைக்க முடியாது என பிரிட்டிஷ் விமான நிறுவனம் மறுத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் மருத்துவக் காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து அமெரிக்கா வந்தனர் கெவின் செனைஸ் என்ற இளைஞனும் அவனது பெற்றோரும். 20 வயதான கெவினுக்கு உடலில் ஏற்பட்ட ஹார்மோன் கோளாறால் உடல் எடை கூடியது. அதன் விளைவாக 500 பவுண்டானது கெவின் எடை.

இதனால், அதிக எடை எனக் காரணம் காட்டி கெவினின் விமான பயணத்திற்கு அனுமதி மறுத்துள்ளது பிரிட்டிஷ் விமான நிறுவனம்.

அனுமதியில்லை...

அனுமதியில்லை...

மேயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கெவின், சிகிச்சை முடிந்ததும் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்காக திட்டமிட்டான். இதற்காக தனது பெற்றோருடன் பிரிட்டிஷ் விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் பயணத்தேதியன்று விமான நிலையத்திற்கு வந்த கெவினையும் அவரது மருத்துவ அறிக்கைகளையும் பார்த்த விமான நிறுவன அதிகாரிகள் அவரை தங்கள் விமானத்தில் ஏற்றிக் கொள்ள மறுத்துவிட்டனராம்.

இதாங்க நல்லது...

இதாங்க நல்லது...

கெவினுக்கு எந்த நேரமும் மருத்துவ உதவியும், பிராணவாயுக் கருவியும் தேவைப்பட்டது. இதனால் பயணம் செய்யும்போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் சமாளிக்க முடியாது என காரணம் தெரிவித்துள்ளனர் விமான நிலைய அதிகாரிகள். அவர்கள் தற்காலிகமாகத் தங்கிக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்துகொடுத்த விமான நிறுவனம், அவர்கள் வேறு முறைகளில் பயணம் செய்வதே பாதுகாப்பானது என அறிவுறுத்தியுள்ளனர்.

கப்பல்... ரயில்..

கப்பல்... ரயில்..

இதனையடுத்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓட்டலில் தங்கியிருந்த கெவினின் குடும்பம் மேற்கொண்டு செலவு செய்வதற்கு இயலாமல் ரயில் மூலம் நியூயார்க் சென்று அங்கிருந்து கப்பல் மார்க்கமாக பிரான்ஸ் செல்ல முடிவெடுத்துள்ளது.

தாயார் முறையீடு....

தாயார் முறையீடு....

வரும்போது கெவினை அழைத்து வந்த பிரிட்டிஷ் விமான நிறுவனத்தினர் திரும்ப செல்லும்போது மறுப்பது குறித்து அவரது தாயார் அந்நாட்டுத் தொலைக்காட்சியிலும் முறையிட்டதைத் தொடர்ந்து இவ்விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

முடியாதுனா...முடியாது தான்

முடியாதுனா...முடியாது தான்

அதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டுத் தூதரகமும் இதுகுறித்து பேசிப்பார்த்தும், பாதுகாப்பு கருதி அந்தப் பயணியை அழைத்துச் செல்ல பிரிட்டிஷ் விமான நிறுவனம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
A French family who came to the United States for medical treatment said they were stranded in Chicago after British Airways determined their son was too fat to fly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X