For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகை அச்சுறுத்தும் ஜிக்கா வைரஸூக்கு எதிராக கொசுக்களையே களமிறக்க புதிய திட்டம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகையே மிரட்டி வரும் ஜிக்கா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் கொசுக்களை களமிறக்க முடியும் என்று அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஜிக்கா வைரஸ் முதன் முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிக்கா என்ற காட்டில் கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு இப்பெயர் வந்தது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால்தான் இந்த வைரசும் பரவுகிறது.

Too soon to release GM mosquitoes to fight Zika: US study

ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது. 2007ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது.

அதன்பிறகு, 2015ம் ஆண்டு மேதம் மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.

இதையடுத்து ஜிக்கா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் குழு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் மூலம் ஜிக்கா, மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க முடியும் என்று அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

கொசுக்களின் மரபணுக்களை மாற்றி அவற்றை வெளிவிடுவதன் மூலம், ஜிக்கா மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Releasing genetically-modified mosquitoes into the wild to fight malaria, Zika virus, US study
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X