For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போர்.. மரணம்.. கண்ணீர்.. 2017ஐ உலுக்கிய டாப் புகைப்படங்கள்!

2017ல் நடந்த பல்வேறு சம்பவங்களில் சில புகைப்படங்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    2017ஐ உலுக்கிய டாப் புகைப்படங்கள்!- வீடியோ

    சென்னை: 2017ம் ஆண்டு ஒருபக்கம் உலகம் தொழிநுட்பத்தில் வளர்ந்து கொண்டே சென்றாலும் மற்றொரு பக்கம் போரும் கலவரமும் நடந்து கொண்டேதான் இருந்தது. இந்த மனதை உறைய வைக்கும் சம்பவங்களை விட அந்த சம்பவங்கள் குறித்த புகைப்படங்கள்தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

    ஆப்கானிஸ்தானில் நடந்த கலவரத்தில் தொடங்கி லண்டனில் நடந்த தீ விபத்து வரை பல புகைப்படங்கள் உலகை உலுக்கியது. இந்த புகைப்படங்கள் 2017ல் மட்டும் இல்லாமல் வரலாற்றிலும் பல முக்கிய சான்றுகளை விட்டுச்சென்று இருக்கிறது.

    மனதை பார்த்ததும் கரைய வைக்கும் இந்த புகைப்படங்கள் தான் 2017ன் மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படங்கள் என்று கூறப்படுகிறது.

    கலவரம்

    கலவரம்

    ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்த வருடம் முழுக்கவே ஐஎஸ் கிளிர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்பு படைக்கும் இடையில் சண்டை நடந்து கொண்டே இருந்தது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக இந்த சண்டை உக்கிரமாக நடந்தது. இந்த புகைபடத்தை 'ஒமர் சோபாணி' என்ற நபர் எடுத்து இருக்கிறார். அங்கு மசூதி மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது இந்த சிறுவன் எதையும் கவனிக்காமல் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அலி அஹமது என்ற இந்த சிறுவன் பின் பாதுகாப்பு படையால் காப்பாற்றப்பட்டான்.

    மொசுல் பிரச்சனை

    மொசுல் பிரச்சனை

    இந்த வருடம் ஈராக்கின் மொசுல் பகுதியில் ஐஸ் அமைப்பிற்கும், ராணுவத்திற்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்தது. அப்போது இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் தன் மகளை தூக்கிக் கொண்டு ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருந்து ராணுவம் இருக்கும் பகுதியை நோக்கி சென்று இருக்கிறார். இந்த படத்தை எடுத்த 'கோரான் தோமஸ்விக்' இதுகுறித்து ''அவர்கள் ஓடிவருவதை பார்க்கும் போது எனக்கு அழுகை வந்துவிட்டது. இருவரும் உயிருக்கு பயந்து கத்திக் கொண்டே வந்தார்கள்'' என்று பேட்டி அளித்து இருக்கிறார்.

    லண்டனில் தீ

    லண்டனில் தீ

    லண்டனில் இருக்கும் 'கிரேன்பெல் டவர்' கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. முதலில் சிறிய அளவில் ஏற்பட்ட இந்த தீ கட்டிடம் முழுக்க பரவியது. நடு இரவில் இந்த தீ ஏற்பட்டதால் கட்டுப்படுத்த முடியாமல் பரவியது. இந்த புகைப்படத்தை 'டோபி மேல்விலே' என்பவர் அதிகாலை எடுத்து இருக்கிறார். இந்த படத்திற்கு பின் பக்கம் இருக்கும் சர்ச்சின் காரணத்தால், உலகம் முழுக்க ஒரே நாளில் புகைப்படம் வைரல் ஆனது.

    ஏமனில் நடத்த கொடூரம்

    ஏமனில் நடத்த கொடூரம்

    சவுதி, ஏமன், லெபனான் போன்ற எண்ணெய் வள நாடுகளுக்கு இடையில் இந்த வருடம் அடிக்கடி சண்டை வந்தது . சவுதி நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏமனில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட 'ஆயாவ் முகமது மன்சோர்' என்ற இந்த சிறுமியின் புகைப்படம் இப்போது பார்க்கும் போது கூட கண்களில் கண்ணீரை உண்டாக்கும். காலித் அப்துல்லா என்ற பத்திரிக்கையாளர் இந்த புகைப்படத்தை எடுத்தார்.

    கெத்தான புகைப்படம்

    கெத்தான புகைப்படம்

    இந்த புகைப்படத்தை எடுத்த 'கை பாபேன்பேட்ச்' என்பவர் இதுகுறித்து கூறியுள்ளார். அதில் ''அப்போது ஜெர்மனியில் ஜி20 மாநாடு நடந்து கொண்டு இருந்தது. நாட்டில் இருந்த இடதுசாரி அமைப்புகள் ஜெர்மனி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. அப்போது வந்த ராணுவத்திற்கு சொந்தமான புல்டோசர் வாகனத்தை இந்த இளைஞர் மறைக்கிறார். யாரும் எதிர்பார்க்காமல் வந்த அந்த வாகனத்தை இவர் தனியாக சமாளிப்பார். அப்போது அவர் கையில் பியர் பாட்டில் இருந்தது. நான் எடுத்த சிறந்த புகைப்படம் இது'' என்று கூறியுள்ளார்.

    எரியும் மனிதர்

    எரியும் மனிதர்

    இந்த புகைபடம் வெனிசுலாவில் எடுக்கப்பட்டது. அந்த நாட்டின் அதிபருக்கு எதிராக நடந்த பேரணியில் இந்த நபர் திருடிவிட்டதாக குற்றச்சாட்டப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக இவர் கொடூரமாக நெருப்பு வைத்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இவர் திருடியது மட்டும் இல்லாமல் அதிபருக்கு ஆதரவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர் மீது மக்கள் தீ வைத்தனர் என்று புகைப்படம் எடுத்த மார்க்கோ பெல்லோ குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    Top powerful photos of 2017 and its back story. The photos from Afghanisthan to Germany riot got so viral in 2017.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X