For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவையற்ற 2,700 துப்பாக்கிகளை ஒப்படைத்த டொராண்டோ நகர மக்கள்.. பரிசு வழங்கி அசத்திய போலீஸ்

Google Oneindia Tamil News

டொராண்டோ: தேவையின்றி வைத்திருக்கும் துப்பாக்கிகளை ஒப்படைக்கும் "கன் பைபேக்" திட்டத்தின் படி நடப்பாண்டு, சுமார் 2700-க்கும் அதிகமான துப்பாக்கிகளை குடிமக்கள் திரும்ப ஒப்படைத்துள்ளதாக டொராண்டோ நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

டொராண்டோவில் துப்பாக்கிகளால் ஏற்படும் வன்முறை பிரச்சனையை தீர்க்க நடத்தப்பட்ட இந்த திட்டம், சுமார் 3 வாரங்களாக நடைபெற்று வந்தது. இது குறித்து தகவல் தெரிவித்த டொராண்டோ நகர போலீஸார், வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகளவிலான துப்பாக்கிகளை திரும்ப பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Toronto city people who handed over 2,700 unnecessary guns via gun buyback scheme

இது குறித்து கருத்து தெரிவித்த காவல் அதிகாரி ஒருவர், இந்த ஆண்டு அதிகளவில் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது ஒரு நல்ல செய்தியாக இருக்கிறது. சுமார் 1,900 நீண்ட துப்பாக்கிகள் மற்றும் 800 கை துப்பாக்கிகள் கன் பைபேக் திட்டத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதாக கூறியுள்ள அவர், இவை அனைத்தும் விரைவில் அழிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.

 லோக்சபா தேர்தல் முடிந்தது.. எக்சிட் போல் முடிவுக்காக.. ஆர்வத்துடன் காத்திருக்கும் மக்கள் லோக்சபா தேர்தல் முடிந்தது.. எக்சிட் போல் முடிவுக்காக.. ஆர்வத்துடன் காத்திருக்கும் மக்கள்

தங்கள் வீடுகளில் தேவையற்ற துப்பாக்கிகள் இருந்தால் அவற்றை பாதுகாப்பாக அரசிடம் ஒப்படைத்து விடுங்கள். ஒருவேளை தவறான நபர்கள் கையில் அது கிடைத்தால் பெரிய அபாயமாகிவிடும் என எச்சரித்திருந்தோம்.

இதனை கவனத்தில் கொண்டு கன் பைபேக் திட்டத்தில் அதிக அளவில் பங்கேற்ற டொராண்டோ நகரவாசிகளை நினைத்து மகிழ்ச்சியடைவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு முன்னரும் இவ்வாறு துப்பாக்கிகளைக் ஒப்படைப்போருக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்று திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போது, 2008ம் ஆண்டில் 2,000 துப்பாக்கிகளும், 2013-ம் ஆண்டில் 500 துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்

இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கபன் பைபேக் திட்டத்திற்காக சுமார் 7,50,000 டாலர்கள் ஒதுக்கப்பட்டன. இதில் நீண்ட துப்பாக்கிகளை ஒப்படைத்தவர்களுக்கு 200 டாலர்களும், கைத்துப்பாக்கிகளை ஒப்படைத்தவர்களுக்கு 350 டாலர்களும் சன்மானமாக வழங்கப்பட்டது

English summary
The Toronto City Police reported that more than 2700 gunmen were handed over by the "Gun buyback" project, which handed out unnecessary guns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X