For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமரிக்காவில் ஹாலோவியன் திருவிழாவைக் கொண்டாடும் ஆமைகள்

Google Oneindia Tamil News

சாண்டிகோ: அமெரிக்காவில் தற்போது மனிதர்கள் மட்டுமின்றி ஆமைகளும் ஹாலோவியன் திருவிழாவை குதூகலமாகக் கொண்டாடி வருகின்றன.

அமெரிக்கா, கண்டா முதலிய நாடுகளில் ஹாலோவியன் திருவிழா அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது அமெரிக்க நாட்டின் தீபாவளி எனப்படுகிறது.

Tortoises enjoy pumpkin breakfast at San Diego Zoo

இறந்த பிறகு சொர்கத்துக்கும் போகாமல், நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாளாக இந்த " ஹாலோவியன் திருவிழா " கொண்டாடப்படுகிறது.

தீபாவளியைப் போலவே ஹாலோவியனுக்கும் வாழ்த்து அட்டைகளிலிருந்து பூங்கொத்துகள், பரிசுக்கூடைகள், ஹாலோவியன் குக்கீஸ், டாய்ஸ், கேண்டி எனப்படும் மிட்டாய் தினுசுகள், ஸ்டிக்கர்கள், பேனா, பென்சில், ஆடியோ விடியோ காசட்டுகள், வித விதமான முகமூடிகள் என கடைகளில் அக்டோபர் மாத துவக்கத்திலேயே படுசுறுசுறுப்பாக வியாபாரம் களைகட்டத் துவங்கிவிடுகிறது. இது தவிர 24 மணி நேரமும் இயங்கும் உலகளாவிய ஆன் லைன் ஷாப்பிங் பிசியாக நடைபெறுகிறது.

இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டிகோ வன உயிரியல் பூங்காவில் ஹோலோவின் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக அங்குள்ள வயதான ஆமைகளுக்கு செதுக்கிய பரங்கி காய்களை பூங்கா ஊழியர்கள் காலை உணவாக வழங்கி வருகின்றனர்.

அந்த பூங்காவில் உள்ள சில ஆமைகளின் வயது 130 முதல் 140 இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சில ஆமைகள் 1928-ஆம் ஆண்டு அங்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பூங்கா பராமரிப்பாளர் ஜான் கார்ல்சன் கூறுகையில், ஆமை இனம் அழிவை நோக்கி செல்வதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் இந்த ஆமைகளைக் காண மக்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதில் ஆண் ஆமைகளின் எடை 500 பவுண்டுகளும், பெண் ஆமைகளின் எடை 250 பவுன்டுகளுக்கு மேலும் இருக்கிறது, என்றார்.

இதற்கிடையில் நியுயார்க் நகரில் ஹாலோவியன் விழாவை கொண்டாடும் வகையில், செல்லபிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பல வண்ண ஆடைகளை தங்கள செல்ல நாய்களுக்கு அணிவித்து போட்டிக்கான தளத்திற்கு அழைத்து வந்தனர்.

English summary
The San Diego Zoo's Galapagos tortoises celebrated the Halloween season today by munching on pumpkins for breakfast, park officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X