For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுடு தண்ணி வை.. தூக்கி எறி.. ஹேப்பி ஸ்னோ டே.. கலகலக்கும் சிகாகோ!

Google Oneindia Tamil News

சிகாகோ: சிகாகோவில் எங்கு பார்த்தாலும் இதே விளையாட்டுதான். பனியாவது, உறைஞ்சு கிடப்பதாவது என்று ஆளாளுக்கு சுடு தண்ணி, கொதிக்கும் டீ என டப்பா டப்பாவாக தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.. எங்கு என்று கேட்கிறீர்களா.. வெளியில் போய் தூக்கி எறிந்து விளையாடத்தான்.

சிகாகோ நகரில் வரலாறு காணாத குளிர் இந்த வருஷம் ஜனவரி மாதத்தில் இறுதியில் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட முப்பத்தி நான்கு வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு குளிர் சிகாகோவை சூழ்ந்து சுருட்டிக் கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் ஒரே பனிதான். அள்ளி அள்ளிப் போட்ட வண்ணம் உள்ளனர்.

Toss up cup of water in air in Chicago

இதுவரைக்கும் இங்க பதிவான டெம்பரேச்சரில் மிகக் குறைந்தது மைனஸ் 23 டிகிரி செல்சியஸ் தான். ஆனா இந்த வருஷம் மைனஸ் 29 டிகிரி வரை குறைந்து இருக்கிறது. இந்த குளிர் எவ்வளவு கடுமையான குளிர் என்றால் ஒரு கப் சுடச்சுட தண்ணீரை எடுத்து அப்படியே காற்றில் வீசினால் அது ஐஸ் கட்டியாக மாறி விழும் அளவுக்கு குளிர்.

இப்படியாக தண்ணியை கொதிக்கவிட்டு காற்ற்றில் வீசினால் பனியாக ஆகும்னு தெரிந்தால் நம்ம ஆளுங்க ட்ரை பண்ணாம இருப்பாங்களா. அப்படி முயற்சிக்கும் போது என்ன ஆகுது என்று நடந்த சுவாரஸ்ய காட்சியை பார்க்க இந்த வீடியோவை பாருங்க. இப்ப இதுதாங்க சிகாகோவில் லேட்டஸ்ட் விளையாட்டு.. வாங்க வேடிக்கை பார்ப்போம்

(மனைவி மீது கோபமாக இருக்கும் கணவர்களும், கணவர் மீது கோபமாக இருக்கும் மனைவியரும் நம்ம ஊரில் இதை செஞ்சு பார்த்துடாதீங்க.. பிறகு, விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது!!)

- Inkpena சஹாயா

English summary
Many people are trying to toss a cup of hot water in air in chicago in -29 degree celcius because it turns into ice immediately. Everybody is so curious to try it and post it in twitter you tube and facebook and here is one such attempt from a Tamilian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X