For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

99 ஆண்டுகளுக்குப் பின் நாளை முழு சூரியகிரகணம்- இருளில் மூழ்கும் வட அமெரிக்கா

அமெரிக்கா நகரங்களை கடந்து செல்லும் சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை ஏற்படுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: 99 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா நகரங்களை கடந்து செல்லும் முழு சூரிய கிரணம் நாளை ஏற்பட உள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும்போது ஏற்படுவது சூரிய கிரகணம். அமெரிக்காவின் 14 நகரங்களில் இந்த முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

99 ஆண்டுகளுக்கு பின்...

99 ஆண்டுகளுக்கு பின்...

99 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் நகரங்களை கடக்கிறது. இந்திய நேரப்படி நாளை இரவு 9 மணிக்கு இந்த சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் நம்மால் இதை பார்க்க முடியாது.

30 கோடி பேர்

30 கோடி பேர்

அமெரிக்காவில் சுமார் 3 நிமிடங்கள் வரை இந்த கிரணம் நீடிப்பதால் முழுமையாக இருள் சூழ்ந்துவிடும். உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்கள் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும் என்கிறது நாசா. மேலும் இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் நாசா வெளியிட்டுள்ளது.

உலகம் அழியும்

உலகம் அழியும்

அத்துடன் இந்த சூரிய கிரகணத்தை வைத்து ஏகப்பட்ட செய்திகள் வலம் வருகின்றன. மனித இனத்தையே அழிக்க வரக் கூடிய சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு கிரகணத்தின்போதும்..

ஒவ்வொரு கிரகணத்தின்போதும்..

உலகின் பெரும்பகுதி மனிதர்களை காவு கொள்ளக் கூடிய சூரிய கிரகணம் இது என்றெல்லாம் கூறப்படுகிறது. ஒவ்வொரு சூரிய கிரகணத்தின் போதும் இத்தகைய செய்திகள் வலம் வருவது இயல்புதானே.

English summary
The NASA informed that all of the North America will witness a solar eclipse on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X