For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'இந்த’ பீச்சில் செல்பி எடுத்தால் மரண தண்டனை.. மிரட்டும் தாய்லாந்து அரசு!

Google Oneindia Tamil News

தைபே: தாய்லாந்தில் விமான நிலையம் அருகே உள்ள மாய்காவோ கடற்கரை பகுதியில் செல்பி எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக தாய்லாந்து கருதப்படுகிறது. அந்நாட்டின் புக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. மிகவும் பிரபல சுற்றுலாதளமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.

tourists warned they face death penalty for taking pictures on thai beach

நிலவை சேதப்படுத்திய இஸ்ரேல் விண்கலம்!நிலவை சேதப்படுத்திய இஸ்ரேல் விண்கலம்!

இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய மற்றும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லக் கூடிய விமானங்கள், இந்த கடற்கரைப் பகுதியில் மிகத் தாழ்வாக பறப்பது வழக்கம். அப்படி கைக்கெட்டும் தூரத்தில் பறக்கும் விமானங்களுக்கு அருகே நின்று செல்பி எடுத்துக் கொள்ள சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், இப்படி செல்பி எடுப்பதால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு, விமானிகளின் கவனமும் திசை திரும்ப வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, பெரும் விபத்துக்களை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாய்காவோ கடற்கரையில் செல்பி எடுக்க அம்மாகாண அரசு தடை விதித்தது.

ஆனபோதும், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விமானங்களுடன் செல்பி எடுப்பதை சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுப்பதை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தடையை மீறி விமான நிலையம் முன்பு 'செல்பி' படம் எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்தாவது, இது போன்று செல்பி எடுப்பவர்கள் எண்ணிக்கை குறையும் என அரசு எண்ணுகிறது. ஆனால், இதனால் அந்தக் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்பிருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

English summary
Travellers are at risk of hefty fines, years in jail or being executed for taking selfies at a beach an airport in Thailand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X