For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடங்கியது வர்த்தகப் போர்.. அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் இதெல்லாம் நடக்குமாம்!

அமெரிக்கா, சீனா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    USA Vs CHINA: அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் ஆபத்து இருக்காம்- வீடியோ

    பெய்ஜிங்: அமெரிக்கா, சீனா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அமெரிக்காவை சீனா வெளிப்படையாக எதிர்க்க துணிந்து உள்ளது.

    5000 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு நாடு, சார்ஸ் நோய் தாக்குதல், தொடர் சூறாவளி தாக்குதல், கடும் வறுமை, கழுத்தை நெறிக்கும் மக்கள் தொகை, எல்லைகளில் நிலவும் பிரச்சனை என அத்தனையையும் அசால்ட்டாக சமாளித்த கம்யூனிச நாடான சீனா.. தற்போது உலகின் மிகப்பெரிய கார்ப்ரேட் நாடான அமெரிக்காவை எதிர்கொள்ள போகிறது.

    ஆம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அறிவிக்கப்படாத போர் தொடங்கிவிட்டது. ஒரு போரின் தொடக்கம் எப்போதும் பொருளாதார ரீதியாகத்தான் இருக்கும் (பண்டைய காலத்தில் பசுவை கடத்தியது போல). தற்போது அமெரிக்கா சீனா இடையே பொருளாதார போர் தொடங்கிவிட்டது.

    மமதாவை பாஜக குறி வைப்பது இதனால்தான்.. மோடியை கடுமையாக கலாய்க்கும் அகிலேஷ் யாதவ்! மமதாவை பாஜக குறி வைப்பது இதனால்தான்.. மோடியை கடுமையாக கலாய்க்கும் அகிலேஷ் யாதவ்!

    தொடக்கம்

    தொடக்கம்

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார். இதில் இந்தியா மீதும் சீனா மீதும் அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். அமெரிக்கா பிற நாடுகளின் பொருட்களுக்கு குறைவாக வரி விதிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் பொருட்களுக்கு பிற நாடுகள் அதிக வரி விதிக்கிறது என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். இந்த பேட்டிதான் பிரச்சனைக்கு தொடக்கம்.

    நிலவரம் என்ன

    நிலவரம் என்ன

    அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25% வரி விதிக்கப்படுகிறது. சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது. சீனா மீது இது தொடர்பாக அவர் அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறார்.

    அதிகம் ஆனது

    அதிகம் ஆனது

    சீனாவில் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது, அதை குறைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சீனா வரியை குறைக்கவில்லை என்பதால் அமெரிக்கா சீன பொருட்கள் மீதான வரியை அதிகரித்தது. எவ்வளவு என்றால் 25% வரி விதிப்பை அமெரிக்கா சீனாவிற்கு எதிராக அதிகரித்தது.

    சீனாவும் விடவில்லை

    சீனாவும் விடவில்லை

    ஆனால் நீ கார்ப்ரேட் என்றால் நான் கம்யூனிஸ்ட் என்று சீனா அதிரடி நடவடிக்கையில் குதித்தது. உன் பசி போக மீதம் இருக்குற இட்லி உன்னோடது கிடையாது என்று கூறிக்கொண்டே.. அமெரிக்கா மீது 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரியை கூடுதலாக சுமத்தியது. டிரம்ப் இதை எதிர்பார்க்கவில்லை. இதுதான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.

    ஏன் வரி உயர்வு

    ஏன் வரி உயர்வு

    ஒரு நாடு இன்னொரு நாடு மீது வரி உயர்த்த முக்கிய காரணம் உள்ளது. அமெரிக்க மார்க்கெட்டை சீனா பெரிய அளவில் நம்பியுள்ளது. அமெரிக்காவில் இப்போது சீன பொருட்கள் அதிக விலைக்கு விற்றால், அதைவிட குறைவான விலைக்கு விற்கும் அமெரிக்க பொருட்களை மக்கள் வாங்குவார்கள். இதனால் சீனா பெரிய பாதிப்பை சந்திக்கும். ஏற்றுமதியை நம்பி இருக்கும் சீனா பெரிதாக பாதிக்கும்.

    இதுதான் போர்

    இதுதான் போர்

    இதனால் சீனா அமெரிக்க பொருட்கள் மீதான வரியை மேலும் அதிகரித்தது. இப்படி இரண்டு பெரிய நாடுகள் மாற்றி மாற்றி தங்களை கிள்ளிக் கொள்கிறது. இதுதான் வர்த்தக போர் என்று அழைக்கப்படுகிறது. இந்த வர்த்தகப் போரில் வர்த்தகம் என்பதை நீக்கிவிட்டு வெறும் போர் என்று எழுதும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள். ஆம், இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

    என்னவெல்லாம் நடக்கும்

    என்னவெல்லாம் நடக்கும்

    இந்த வர்த்தக போர் காரணமாக பின்வரும் பிரச்சனைகள் எல்லாம் நடக்கலாம்.

    • இரண்டு நாடுகளும் நேரடியாக போரில் குதிக்கலாம்.
      • சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கலாம்.
        • சீனா மீதான பொருளாதார தடையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தலாம்.
          • சீனா இந்தியா இடையிலோ அல்லது அமெரிக்கா இந்தியா இடையிலோ பிரச்சனை வரும்.
            • உலகின் இரண்டு பொருளாதார வல்லரசுகள் மோதுவதால் விளைவாசி கடுமையாக உயரும்.
              • ஆசியாவில் பெரிய பொருளாதார சீர்குலைவு ஏற்படும், என்கிறார்கள்.

    English summary
    Trade War between China and the USA on the peak ever: What will happen next?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X